குஜராத் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா நேற்று சீனியர் வீரரான முகமது சமியை திட்டியதாக கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ரீடெய்ன் (Retain ) செய்யப்பட்டு கேப்டன் பதவியில் இருக்கும் வீரர்தான் ஹர்திக் பாண்டியா. இவர் இந்தியாவுக்கு ஒரு முக்கிய ஆல்ரவுண்டர். அவருக்கு கேப்டன் பதவி இதுதான் ஐபிஎல்லில் முதல் முறை, முதல் முறை ஐபிஎல் கேப்டன்சியிலையே அவரின் முதல் மூன்று போட்டிகளில் வென்றார். என்னதான் அவர் மூன்று போட்டிகளை வென்றாலும் அவருக்குள் இருக்கும் கர்வம் திமிரு அதிகமாகி விட்டது என்று கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர் அப்படி என்னதான் நடந்தது ?
இதற்கு முன்பு பஞ்சாப் அணியிடம் 6 பந்துகளில் 16 ரன்கள் என்று இருந்த கட்டாயத்தில் மில்லர் ஹர்திக் பாண்டியாவை ரன் அவுட் செய்து விடுவார். ஆனால் உண்மையிலேயே அது பாண்டியாவின் தவறுதான் அவர்தான் முதலில் கூப்பிட்டு விட்டு பின்பு ரன் அவுட் ஆனதும் மில்லரை கடுமையாக மைதானத்திலேயே திட்டி விட்டு வெளியே செல்வார். அந்த இடத்திலேயே மில்லர் சற்று உற்சாகம் குறைந்து காணப்பட்டார். அதன்பிறகு இரண்டு பந்துகள் அவர் சரியாக ஆடவில்லை ஆனால் எப்படியோ கடைசியில் தேவாட்டியா வந்து இரண்டு சிக்ஸர்களை விளாசி குஜராத் அணியின் மானத்தை காப்பாற்ட்ருவார் …

ஆனால் அந்தப் போட்டியில் தோற்றுப் போன பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் அந்த கடைசி ஓவரை வீசிய பவுலரை தட்டிக் கொடுத்து மேலும் உத்வேகம் ஊட்டினார். அதை பார்ப்பதற்கு அழகாக இருந்தது ஆனால் இங்கே ஹர்டிக் பாண்டியா வீரர்களை கடுமையாக மைதானத்திலேயே திட்டுகிறார்.
இது ஒருபுறமிருக்க நேற்று நடந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சந்தித்தது அப்போது ஹத்திக் பாண்டியா வீசிய ஒரு பந்து முகமது ஷமியை நோக்கி சென்றது அந்த பந்து கேட்ச் இல்லை ஆனால் அவர் அதை தடுக்க முயன்றார் இதைக்கண்ட ஹர்டிக் பாண்டியா அதை ஏன் நீங்கள் கேட்சு பிடிக்க செல்லவில்லை என்று அவரை கடுமையாக மைதானத்திலேயே திட்டினார். அதைக்கேட்ட ஷமிக்கு சற்று முகமே மாறிப்போனது.
Watch Video :-
C…. @hardikpandya7 U R Only By Mistakely Making GT Captain,Not A Legend Player,Please Respect Senior AND Legend Player @MdShami11 pic.twitter.com/r2XGNFqIq8
— Vicky More(Srk Fan) (@srk_fan_vicky) April 11, 2022
முகமது சமி இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் டாப் 10 பாஸ்ட் பவுலர்ஸ்கள் பட்டியல் எடுத்தால் அதில் அவர் பெயர் நிச்சயமாக இருக்கும் அப்படிப்பட்ட ஒரு பிளேயர் கேட்சை தவற விட்டு இருந்தாலும் நீங்கள் இப்படி பேசுவது நியாயமற்றது என ஹர்டிக் பாண்டியாவை திட்டி வருகின்றனர்.
எனவே இதுபோன்ற போக்கை அவர் வரும் காலங்களில் மாற்றிக் கொண்டால் தான் அவரின் அணி மேலும் மேலும் வெற்றிகளை தொடும் அதனால் இந்த ஆணவம் மிகுதி பேச்சு, கடும் கோபம் கொள்வது என இதை விளையாட்டு வீரர்களிடம் காண்பிக்கக் கூடாது என அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
