பெங்களூருவில் குற்றப்பிரிவு போலீசார் என்னை முழு நிர்வாணப்படுத்தி லத்தியால் அடித்து துன்புறுத்துகின்றனர் என 64 பக்கத்திற்கு கடிதம் எழுதி மனைவிக்கு அனுப்பி பரபரப்பை கிளப்பியுள்ளார் ஹரி நாடார்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரி நாடார். இவர் தென்தமிழகத்தில் உள்ள பிரபல ரவுடியான ராக்கெட் ராஜாவின் பனங்காட்டு படை கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு இருந்தார். இவர் நகைகள் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர் என்பதால் கைகளிலும் கழுத்துகளிலும் தொங்க தொங்க கிலோ கணக்கில் நகைகளை போட்டுக் கொள்வார். இதனாலேயே இவரை நடமாடும் நகைக்கடை என பலரும் செல்லமாக அழைத்தனர். சிறிது நாட்களுக்கு முன்பு இவர் ஒரு மோசடி புகார் ஒன்றில் ஈடுபட்டு பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு ஹரி நாடாரை சொந்தம் கொண்டாடி கொண்டு மனைவி ஷாலினி மலேசியாவை சேர்ந்த அவரது ஹரி நாடாரின் காதலி மஞ்சு என்ற நபருடன் ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் அடித்துக் கொள்வது வாடிக்கை ஆனது.

தனது மனைவி ஷாலினியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஹரி நாடார் விவாகரத்து வழங்க இருந்த நிலையில் மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழும் படி மனைவி ஷாலினி அவரை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். மேலும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மஞ்சு என்பவர் எனது கணவரை என்னிடம் இருந்து பிரிக்க பார்க்கிறார் என மனு ஒன்றை கொடுத்து அவரை மீட்டுத் தரக் கூறினார். இந்த நிலையில் தான் சிறையில் இருந்தபடி மனைவிக்கு 64 பக்கம் வருமாறு ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார்.
அவர் ஆரம்ப கட்ட திருமண வாழ்க்கை குறித்தும் தனது மனைவி ஷாலினி ஈவு இரக்கம் இல்லாதவர் என்றும் அதனாலையே அவரை நான் விவாகரத்து செய்ய விரும்பினேன் என்றும் கூறியுள்ளார். மேலும் கிளப்பு மூலம் அறிமுகமான மலேசியாவை சேர்ந்த மஞ்சு தான் எனக்கு மனைவியாக வாழ்ந்ததாகவும் தனது கைது சமயத்தில் மஞ்சுதான் எனக்கு பக்கபலமாக இருந்தார் என்றும் அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளார். என்னை வெளியே எடுக்க பனங்காட்டு படையாட்சி தலைவர் ராக்கெட் ராஜாவிடம் மஞ்சு 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும் தனது கார்கள் அனைத்தையும் ராக்கெட் ராஜா பெற்றுக் கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் என்னை பெங்களூர் குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் மற்றும் காவலர்கள் ஜட்டியுடன் நிற்க வைத்து லத்தி மற்றும் ஹாக்கி மட்டையால் கை முதுகு பின்புறம் என்று கடுமையாக அடித்த துன்புறுத்துகின்றனர் என்றார் தற்போது இந்த செய்தி பரபரப்பாகி வருகிறது.
