இந்த வெயில் காலத்தில் உடல் சூட்டை தடுக்க என்ன வழி

கோடை காலம் ஆரம்பித்த உடனேயே வெயிலின் தாக்கம் அதிகமாகி விடும். இதன் காரணமாக பலருக்கு இயற்கையாகவே உடல் உஷ்ணம் அதிகரிக்கும். இதன் விளைவாக அதிக சோர்வு, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, அதிக வியர்வை, சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை மற்றும் சரும நோய்கள் என பலரும் கோடை காலங்களில் அவதிப்படுவது உண்டு. இன்னைக்கு இந்த பதிவுல இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கவும், வெயிலின் தாக்கத்தை சமாளிக்கவும், கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள என்ன உணவு சாப்பிட வேண்டும் என்ற சில பயனுள்ள தகவலை தான் பார்க்கவுள்ளோம்.

1.) தர்பூசணி :- அதிக நீர்ச்சத்துள்ள பழங்களில் முதன்மையானது தர்பூசணி. உடலில் நீர் வறட்சியை போக்க நீர்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமான ஒன்று. அந்த வகையில் தர்பூசணி உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும் உடல் வறட்சியைப் போக்கவும் ஒரு அற்புதமான பழம்.

2.) வெள்ளரிக்காய் :- வெயில்காலம் ஆரம்பித்தவுடனேயே பேருந்து நிலையங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூவிக் கூவி விற்கப்படும் காய் வெள்ளரிக்காய். வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அடங்கி இருக்கும். வெள்ளரி உடலை குளிர்ச்சியாக வைப்பது மட்டும் இல்லாமல் செரிமானத்தை எளிதாக்கும். வெள்ளரிக்காயில் நாட்டு வெள்ளரி மற்றும் ஹைபிரிட் வெள்ளரி என இரண்டு வகை உண்டு. நாட்டு வெள்ளரியை சாப்பிடுவதே மிகவும் நல்லது. வெள்ளரிக்காய் வாங்கி சாப்பிடும் போது கவனமாக வாங்கி சாப்பிடுங்க, மேலும் வெள்ளரிப்பழம் இந்த சீசனில் அதிகமாக கிடைக்கும், ஜூஸை குடித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.

“கருப்பு திராவிடன் டா ….” யுவனின் புதிய இன்ஸ்டா போஸ்ட் | மோடிக்கு ஆதரவாக செயல்படும் இளையராஜாவை மறைமுகமாக தாக்குகிறாரா மகன் ?

3.) முலாம் பழம் :- இந்த பழங்கள் தர்பூசணிக்கு அடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்க கூடிய பழம். அதிக குளிர்ச்சி தன்மை கொண்ட பழங்களில் இதுவும் ஒன்று. மேலும் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

4.) இளநீர் :- எந்த ஒரு கலப்படமும் இல்லாமல் இயற்கையாக கிடைக்கக் கூடிய ஒரு பானம் இளநீர் உடல் வெப்பத்தை தணிப்பதில் இளநீருக்கு நிகர் இளநீர் தான். சிலருக்கு இயற்கையாகவே உடல் உஷ்ணமாக இருக்கும் அப்படிப்பட்டவங்க காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்து வர மிகவும் நல்லது, அந்த நாள் முழுவதும் உடல் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

உடலுறவின் போது அந்தரங்க பாகத்தில் தட்டுவதால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடமுடியும்

5.) நுங்கு :- பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான உணவு பனை நுங்கு. இதில் நீர்ச்சத்து மட்டுமில்லாமல் கனிமச் சத்துக்களும் அடங்கி இருக்கும். நுங்கு உடல் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது. பொதுவாக வெயில் காலங்களில் தான் அம்மை போன்ற நோய்கள் வருவதுண்டு ஆனால் இதனை சாப்பிட்டு வர இந்த பிரச்சினை வருவது தடுக்கப்படும்.

6.) பதநீர் :- பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய மற்றொரு இனிப்பான பானம் பதநீர். பதநீர் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலைக் குளிர வைக்கும். அது மட்டும் இல்லாமல் உடல் சோர்வையும் போக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து மற்றும் ஏராளமான கனிம சத்துக்கள் அடங்கி இருக்கும். இது எலும்புகளை வலுவாக்கும்.

7.) வெந்தயம் :- செலவே இல்லாமல் உடலை குளிர்விக்கும் அஞ்சறைப்பெட்டி பொருள் வெந்தயம். இதில் நார்ச்சத்து, இரும்புச் சத்து எனப் பல சத்துகள் அடங்கி இருக்கிறது. கோடைகாலங்களில் வெப்பத்தை தணிக்க காலையில் வெந்தய கஞ்சி சாப்பிடுவது மிகவும் நல்லது. அல்லது ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைத்து பின் அந்த நீரையும் சேர்த்து சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் குறையும் மற்றும் செரிமான உறுப்புகளும் சீராக இயங்கும் மற்றும் நாட்பட்ட மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.

8.) நீர் மோர் :- மோர் குறிப்பாக வயிற்றை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். வெயில் காலங்களில் காரமான உணவுகளை சாப்பிட அது வயிற்றை பதம் பார்ப்பதும் உண்டு. இதன் விளைவாக வயிற்றுவலி மற்றும் உடல் சூட்டினால் உண்டாகும் வயிற்றுப்போக்கு பிரச்சனையால் தினமும் பலரும் அவதிப்படுவார்கள். தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வர இதுபோன்ற பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும் வெயில் காலங்களில் அடிக்கடி தாகம் ஏற்படும்போது மோர் குடிப்பது மிகவும் நல்லது.

9.) நீராகாரம் :- கோடை காலங்களில் காலையில் சாப்பிட வேண்டிய சிறந்த உணவு நீராகாரம் தென்மாவட்டங்களில் பழைய சாதம் அல்லது கஞ்சி என்று அழைப்பார்கள். உடல் சூட்டை குறைக்கவும் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் சிறந்த உணவு நீராகாரம் சாதத்தில் நீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் அந்த சாதத்தையும் நீரையும் சேர்த்து பிசைந்து எடுக்க இதுதான் நீராகாரம் ஆகிறது.

10.) கம்பங்கூழ் :- உடல் சூட்டை குறைக்க ஏராளமான பானங்கள் விற்பனை செய்தாலும் பழங்காலம் முதல் நம் முன்னோர்கள் வெயிலினால் உண்டாகக் கூடிய உடல் சூட்டை குறைக்க குடித்து வந்த பானம் கம்பங்கூழ். இது உடல் வெப்பத்தை தணிப்பது மட்டுமில்லாமல் உடலை குளிர்ச்சியாக வைக்கும் மிகவும் உதவியாக இருக்க கூடும்.

Spread the love

Related Posts

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியிட தடை கோர்ட் அதிரடி உத்தரவு

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கார்த்தி,

“மத்திய அரசு அழுத்தம் தான் மின் உயர்வுக்கு காரணம்” – செந்தில்பாலாஜி

மற்ற மாநிலத்தை விட குறைவான மின் கட்டணம் தான் தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ளது என கூறியுள்ள அமைச்சர்

சமந்தா மெலிசான மேலாடை அணிந்து தொப்புளை காட்டி வீடியோ வெளியிட்டதால் ரசிகர்கள் குஷி…! வைரல் வீடியோ !

சமந்தா பல படங்களில் நடிக்கும் வரையில் ஒரு ஹீட் கொடுக்காத நடிகையாகத்தான் இருந்தார்கள் கவர்ச்சி காட்டி