சவுதி அரேபியாவில் வாட்ஸ் அப்பில் ஹார்ட் எமோஜிகளை அனுப்பினால் சிறை தண்டனை என அதிரடியான ஒரு ஆர்டரை போட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் சிவப்பு நிற இதய குறியீட்டைக் குறிக்கும் எமோஜி யாரேனும் அனுப்பியதாக புகார் வந்தால் அதை ஒரு குற்றமாக கருதி சைபர் கிரைம் சட்டத்தின்படி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை எனவும், ஒரு லட்சம் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்படும் எனவும் அந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபிய நாட்டில் மோசடிக்கு எதிரான அமைப்பின் உறுப்பினரான ஆல் மோட்டாஸ் குட்பி சவுதி நாளிதழின் தெரிவிப்பது என்னவென்றால் “சிவப்பு நிற இதய எம்மொஜியை ஒருவரது விருப்பமில்லாமல் அதை இன்னொருவர் அனுப்புவது துன்புறுத்தலுக்கு ஈடாக கருதப்படும். ஆன்லைன் சாட்டிங் செய்யும்போது, சிலர் இதய எமோஜி பயன்படுத்துவதால் வேறு ஒருவர் அதை பார்த்து காயமடைகின்றனர். இப்படியான புகார்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்தால் அது துன்புறுத்தல் குற்றத்திற்கு கீழ் வரும்.
யாருடைய அனுமதியும் இன்றி ஒருவருடன் சாட் (Chat) செய்யும் போது அந்த உரையாடலில் சிவப்பு நிற இதய எமோஜியை தவிர்க்கும்படி அவர் எச்சரித்துள்ளார். ஒரு நபரினுடைய தன்மானம் மற்றும் பாலியல் அர்த்தத்துடன் வெளிப்படுத்தும் ஒவ்வொரு செயலையும் துன்புறுத்தல் என்று வரையறுக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பம் மூலம் சிவப்பு நிற எம்மோஜிக்கல் மற்றும் சிவப்பு ரோஜாக்கள் போன்ற விஷயங்களை அனுப்ப கூடாது
இதுபோன்ற இமேஜ்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் நீங்கள் எந்த ஏமோஜிகலை அனுப்பும் பொருட்டு அதற்கு யாரேனும் பாதிக்கபட்டு அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மட்டும் ஒரு லட்சம் சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.