பிரேசிலில் ஒரு இளம் பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. ஆனால் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் வேறு வேறு தந்தை என்று தகவல் வெளிவந்திருக்கிறது.
இந்த அதிசயத்தை மருத்துவர்கள் Heteropaternal Superfecundation என்று அழைக்கிறார்கள். தனித்தனியாக கருத்தரிப்பு உண்டாகும் போது அந்த பெண் இரண்டு நபர்களுடன் ஒரே நாளில் உறவு வைத்திருந்தால் சாத்தியம் என கூறுகின்றனர்.
அதன் பிறகு 9 மாதங்கள் கழித்து அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறது. குழந்தைகளுக்கு முதல் பிறந்தநாள் வர இருக்கிறது. இந்த நிலையில் அவர் தன் குழந்தைகளுக்கு உண்மையான தந்தை யார் என்று தெரிந்து கொள்ள விரும்பி டிஎன்ஏ பரிசோதனை செய்திருக்கிறார்.
“நீட் தேர்வுக்கு தயாராவதற்காக மாணவர்களுக்கு ஹைடெக் பயிற்சி அளிக்கப்படவுள்ளது” – அன்பில் மகேஷ்

அதன்படி அவர் உடலுறவு வைத்துள்ள நபரின் டிஎன்ஏவை சேகரித்த போது ஒரு குழந்தையின் டிஎன்ஏ மட்டுமே பொருந்தி இருக்கிறது. பிறகு மற்றொரு நபருடன் உடலுறவு வைத்துக் கொண்டதை நினைவு படுத்திய மனைவியிடம் அந்த நபரின் டிஎன்ஏ சோதனை நடத்தும்போது மற்றொரு குழந்தையின் டி என் ஏ அந்த நபரின் டிஎன்யுடன் ஒத்தபோனது.
மருத்துவர்கள் இது குறித்து தெரிவித்த போது ஒரு பெண்ணிடமிருந்து இரட்டை கருக்கள் வெவ்வேறு ஆண்கள் மூலம் கருத்தரிக்கப்படும். இந்த சமயத்தில் இந்த மாதிரி நிகழ்வு அரங்கேறும். 10 லட்சங்களில் ஒருவருக்கு தான் இந்த மாதிரி சம்பவம் நிகழும் என கூறியுள்ளனர்.
