கடந்த ஒரு வார காலமாக கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை பெரும் பிரச்சனையாக தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது. கர்நாடகாவில் புதிய ஆடை கட்டுப்பாடு தற்போது அமலில் உள்ள நிலையில் முஸ்லீம் மாணவர்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என கல்லூரி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் முஸ்லீம் மாணவர்களோ ஹிஜாப் எங்கள் உரிமை நாங்கள் அதை அணிந்து வருவோம் என தடாலடியாக கல்லூரியை எதிர்த்து போராட்டம் செய்தனர். இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் கர்நாடக முதல்வர்.

தற்போது இந்த விவகாரம் மாநில உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது நேற்று கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் விதமாக இந்த விவகாரத்துக்கு தீர்ப்பு வரும் வரை அனைவரும் ஹிஜாப் மற்றும் காவி உடைகளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அணிந்து வரக்கூடாது என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெறும் என்று கூறியிருந்தது.

இது ஒரு புறமிருக்க இந்த மாநில உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் அந்த மனுவில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால் “ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இஸ்லாமிய மாணவிகளின் சுதந்திரத்தைக் எடுக்கிறது இந்திய அரசியலமைப்பு சட்டத்திலேயே ஹிஜாப் அணிந்து வரலாம் என்று சட்டம் இருக்கும் போது நீங்கள் அதை எப்படி மறுக்க முடியும்” என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

இவர்கள் போட்ட இந்த மனுவை அவசர கோரிக்கையாக விசாரிக்க நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா முன்னிலையில் இன்று அமர்வுக்கு வந்தது. அதில் அவர் கூறியதாவது :-
“அங்கு என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் இந்த விஷயத்தை தேசிய அளவிற்கு கொண்டு செல்வது சரியானதுதானா என்று யோசிக்க வேண்டும் ஒவ்வொருவருடைய அரசியல் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்” என்று அவர் கூறி இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார்.