கர்நாடகா மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பிய விஷயம்தான் இந்த ஹிஜாப் பிரச்சனை இது மாநிலமெங்கும் பூதாகரமாக பேச தொடங்கப்பட்டது. இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப் அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு வந்ததால், சில இந்து மாணவ மாணவிகள் காவி துண்டை அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு சென்றுள்ளனர்.
இது அங்கு மிகப் பெரிய பிரச்சனையை கிளப்பியது இப்படி மாணவர்களுக்குள் மத அரசியலை கொண்டு சொல்கிறீர்களே என்று பலரும் கேள்வி எழுப்பினர் இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதன் காரணமாக அங்கு பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டது இதைத் தொடர்ந்து மாணவர்கள் ஹிஜாப் மற்றும் காவி உடை அணிந்து கல்வி நிலையங்களுக்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது கர்நாடக உயர்நீதிமன்றம்.
நேற்று முன்தினம் தான் விடுமுறை எல்லாம் முடிந்து கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டது அப்போதும் சில இஸ்லாமிய மாணவிகள் மீண்டும் ஹிஜாப் அணிந்து தான் பள்ளி கல்லூரிகளுக்கு வந்தனர். சில மாணவிகள் ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க ஹிஜாப் கழட்டி வைத்து உள்ளே நுழைந்தனர். ஆனால் சில மாணவிகள் ஆசிரியர்கள் சொல் பேச்சை கேட்காமல் எனக்கு ஹிஜாப் தான் முக்கியம் கல்வி முக்கியம் அல்ல என உதறித் தள்ளி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கே ஒரு பரபரப்பான சூழல் தான் நிலவிக் கொண்டிருக்கிறது.
இப்போது இதைத்தொடர்ந்து, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைந்திருக்கும் லயோலா கல்லூரியில் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. அந்த கல்லூரியில் சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளனர் இதை ஆசிரியர்கள் கண்டித்து ஹிஜாப் போட்டு வந்தால் உள்ளே அனுமதி கிடையாது என அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டனர். இதனால் கல்லூரிக்கு எதிரில் அமர்ந்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதை அறிந்து வந்த சில இஸ்லாமியர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் ஆந்திர மாநிலத்தில் மாணவ மாணவிகளுக்கு இடையே சற்று பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
