தமிழில் ஒளிபரப்பாகும் என் கணவன் என் தோழன் சீரியலின் இந்தி ஒரிஜினல் சீரியலில் நடித்த நடிகை தன்னை தானே திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்த அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மேலும் இந்த தன்னை தானே திருமணம் செய்து கொள்ளும் கலாச்சாரம் சமீப காலமாகவே அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் கூட குஜராத் மாநிலம் பரோடா பகுதியை சேர்ந்த சாமா பிந்து என்கிற 24 வயது பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டு சிங்கிளாக ஹனிமூனும் சென்று வந்திருக்கிறார். இப்போது அதே போல மற்றொரு சம்பவம் ஏற்பட்டு அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

இந்தி சீரியலில் நடித்து பிரபலமான கனிஷ்கா சோனி தான் அவர். இவர் இந்தியில் நடித்த ஒரு சீரியல் தான் தமிழில் என் கணவன் என் தோழன் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. அந்த அளவிற்கு பாப்புலரான நடிகையாக இருக்கும் இவர் தற்போது தன்னைத்தானே திருமணம் செய்து கொள்கிறேன் என அதிர்ச்சியை கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு கழுத்தில் தாலியுடன் நெற்றியில் குங்குமத்தோடு வீடியோ வெளியிட்டு அவர்.
“நான் சுயநினைவோடு தான் இதை செய்தேன் மேலும் எனக்கு தனிமை தான் பிடித்திருக்கிறது, எனக்கு நினைத்தபடி எந்த ஆணும் இதுவரை என் வாழ்நாளில் நான் சந்திக்கவில்லை, அதனால் இந்த முடிவை நான் எடுத்தேன். திருமணம் என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல அதில் காதல், நேர்மை ஆகியவை இருக்க வேண்டும் என நினைக்கிறேன், நான் குடித்துவிட்டு இவ்வாறு உளறுகிறேன் என நினைக்க வேண்டாம் எனக்கு குடிப்பழக்கம் கிடையாது” என அவர் கூறியுள்ளார். ரசிகர்கள் தற்போது இதைக் கேட்டு ஷாக் ஆகியுள்ளனர்.
