வீட்டில் கிரிக்கெட் ப்ராக்டிஸ் செய்வது, ஸ்பின் ஆகும் பந்துகளை எப்படி ஆடவேண்டும் என்று உலகின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனான மாரன்ஸ் லபக்ஷனே (marnus labuschagne) டிப்ஸ் கொடுத்துள்ளார்.
வீட்டில் ஒரு கிரிக்கெட் பிட்ச் மேட்டை (pitch mat) வைத்து அதில் ஆங்காங்கே ஒரு பேபிரிக் (fabric) ஷீட்டை டேப் மூலம் ஓட்டி விட்டு. ஒரு டென்னிஸ் பாலை ஒரு பக்கம் வெட்டி, அதன் மறுபுறம் மேட்டில் முக்கியமாக அந்த பேப்ரிக் ஷீட்டில் பட்டால் எப்படி பால் ஸ்விங் ஆகும் என்றும், அந்த ஸ்விங்கிருக்கு நாம் எப்படி ஆட வேண்டும் என்றும், இப்படி தான் நிஜ போட்டியிலும் ஸ்பின் பந்துகள் வரும் அதனால் அதை எப்படி கையாள வேண்டும் என்று அவர் அவருடைய பாணியில் டிப்ஸ் தருகிறார்.
தற்போது இந்த டிப்ஸ் வீடியோ கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையே பகிர பட்டு வருகிறது.
Playing around with recreating spinning conditions in the backyard 🏏 pic.twitter.com/votnKELwCH
— Marnus Labuschagne (@marnus3cricket) February 17, 2022