ஆக்ரா நகரில் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த மனைவி செருப்பாலே அடித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகம் எடுக்கிறது.
திருமணம் செய்த பிறகும் மற்றொரு உறவில் இருப்பது இந்திய தண்டனைச் சட்டம் 497 பிரிவில் உச்சநீதிமன்றம் தற்போது ரத்து செய்தது. இந்த அதிரடியான நடவடிக்கைக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தாலும் ஒரு சில இடங்களில் எதிர்ப்புகளும் வந்தது. மேலும் இந்த சட்டம் ரத்தானதால் நிறைய தகாத உறவுகள் அதிகரித்து வருகிறது. கலாச்சார சீரழிவு அதிகரிக்கும் என்றும் சிலர் போர் கொடி தூக்கி வருகின்றனர்.

அதுபோலத்தான் ஒரு சம்பவம் ஆக்ரா நகரில் அரங்கேறி உள்ளது. கணவன் வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசத்தில் இருக்கும்போது அதனை கண்ட மனைவி அவரை அடிக்க உடனே செருப்பை கழட்டி வீசுகிறார். அந்த கணவர் இனிமேல் இப்படி பண்ண மாட்டேன் என்னை மன்னித்துவிடு என்னை கெஞ்சுகிறார். இருந்தாலும் செருப்பால் பலத்த அடியை கொடுக்கிறார். மேலும் ஒரு சில நெட்டிசன்கள் இதை பார்த்து கர்மா ஒரு பூமராங் என பதிவிட்டு வருகின்றனர். இவர் அவரது கணவரை அடிக்கும்போது பக்கத்திலேயே இவரது காதலியும் அமர்ந்திருக்கிறார். என்பது குறிப்பிடத்தக்கது.
