காலை எழுந்ததும் பல் துலக்காமலேயே குழந்தைக்கு முத்தமிட வந்ததால் அதை தடுக்க மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் தான் அவினாஷ். இவருக்கும் கோவையை சேர்ந்த தீபிகா என்ற பெண்ணுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. பெங்களூரில் பணி புரிந்து வரும் அவினாஷ் என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்து ஒர்க் from ஹோம் முறையில் வந்து பணியாற்றி வருகிறார்.
அப்போது காலை நேரத்தில் எழுந்து பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தமிடுவது வழக்கமாக வைத்திருந்தார். இதனை கண்டித்து மனைவி தீபிகா பல் துலக்காமல் குழந்தையிடம் செல்லாதீர்கள் முத்தம் கொடுக்காதீர்கள். தொற்று குழந்தைக்கு பரவும் என கண்டித்துள்ளார். ஆனால் அவர் கூறிய நல்ல விஷயத்தை கேட்காமல் இவர் ஆத்திரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சரக்கு பாட்டிலுடன் மாலதீவு பீச்சில் கவர்ச்சி ஷோ காட்டிய மலையாள நடிகை மம்தா

மேலும் ஆத்திரமடைந்த அவினாஷ் பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தீபிகாவை குதின்னார். அக்கம்பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்ததில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார் தீபிகா. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டது என மருத்துவர்கள் கூற அவரின் உடலை கைப்பற்றி பின்பு அவினாஷை அதிரடியாக கைது செய்தனர்.
பல் துலக்காமல் குழந்தையிடம் செல்லாதீர்கள் என மனைவி கூறியதால் கணவன் கத்தியால் குத்தி மனைவியை கொன்றது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
