திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என ஆத்திரத்தில் மனைவியை கட்டி போட்டு கொடூரமாக நடந்து கொண்ட கணவன்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவினங்குடி பகுதியை சேர்ந்தவர்கள் தான் நாகராஜ் மற்றும் ராஜலட்சுமி. இதில் கணவர் கொத்தனார் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கம்மாபுரம் அருகே தொடக்கப் பள்ளியில் சத்துணவு சமையலர் பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. அதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். அந்த பிரச்சினை காரணமாகவே இவர்களுக்குள் அதிகம் பேச்சுவார்த்தை இல்லை.
வழக்கம்போல நேற்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றி போனதால் கணவன் அந்த மனைவியை கட்டி போட்டு தன் கையில் வைத்திருந்த கத்தியால் தோள்பட்டை, முதுகு, கழுத்து என ஆங்காங்கே குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்து இறந்தார் அந்த மனைவி. தனது மனைவியை கொலை செய்த கத்தியோடு அருகிலுள்ள கம்மாபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார் கணவர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவனை உடனே கைது செய்து ரத்த வெள்ளத்தில் மிதந்து இறந்து கிடந்த அவரது மனைவியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அப்போதுதான் ராஜலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம் தெரிய வந்துள்ளது. முதல் கணவர் ஒரு விபத்தில் இறந்து விட்டதால் இரண்டாவதாக நாகராஜன் திருமணம் செய்து கொண்டால். இவரது மனைவியின் நடத்தையில் நாகராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இந்த கொலை நடந்தது எனவும் கூறப்படுகிறது.
