பல துறைகளிலும் பல பெண்களுக்கு இன்றளவும் பாலியல் ரீதியான தொல்லைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் பாலியல் வன்கொடுமையை கணவன் செய்தாலும் குற்றம் குற்றம் தான் என ஒரு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு மாஸ் காட்டியிருக்கிறது.

தன்னை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தார் என்று மனைவியே கணவனுக்கு எதிராக புகார் மனு அளித்திருக்கிறார். இதனையடுத்து அந்த வழக்கு கர்நாடகா நீதிமன்றத்திற்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் விசாரித்தபோது, திருமணம் என்பது ஆண்களுக்கு எந்த மிருகதானத்தையும் செய்வதற்கான சிறப்பு உரிமையை வழங்க வில்லை. பாலியல் வன்கொடுமையை கணவரே செய்தாலும் அது குற்றம் தான் என்று அதிரடி தீர்ப்பை வழங்கி இருக்கிறது உயர் நீதிமன்றம்.

மேலும் அந்த கணவர் மீது பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உத்தரவிட்டனர் கர்நாடக நீதிபதிகள். இந்த உத்தரவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.