ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இமாம் அமைப்பின் தலைமை இமாமாக உள்ள டாக்டர் இமாம் உமர் அகமது இலியாசியை கஸ்தூரிபாய் காந்தி மார்க் மசூதியில் நேற்று சந்தித்து பேசினார்.
மத நல்லிணக்கத்தை பேணி காப்பதற்காக இஸ்லாமிய அமைப்புகளுடன் இந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும், இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டது.

தற்போது இந்த அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தை ஒரு “தேசப்பிதா” என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் “என்னுடைய அழைப்பின் பேரில் மோகன் பகவத் இன்று வருகை தந்தார். அவர் ராஷ்டிர பிதா “தேசத்தின் தந்தை”. இவர் வருகையினால் ஒரு நல்ல செய்தி வெளியிடப்படும். இந்தியாவில் இந்து முஸ்லிம்களாகிய நாம் கடவுள் வழிபாடு முறைகளில் வேறு வேறாக இருந்தாலும். நாம் அனைவரும் ஒன்றுதான்” எனக் கூறினார்.
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் முக்கியமான ஐந்து மத குருக்களை மோகன் பகவத் நேரில் சந்தித்து வருவதாக தகவல் வெளியானது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் கூறிய போது “இந்த சந்திப்பு தொடர் விவாதத்தின் ஒரு பகுதியாவும், ஆர்எஸ்எஸ் தலைவர் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார்” என்று கூறியுள்ளார்.
