பிரிட்டன் நாட்டில் வரும் மார்ச் மாதம் 6 ஆம் தேதியில் இருந்து 27 ஆம் தேதி வரை கோப்ரா வாரியர் என்ற பெயரில் போர் விமான பயிற்சி நடைபெற உள்ளது. இதில் பலதரப்பட்ட நாடுகள் பங்குபெற இருந்தது. இந்தப் பயிற்சியில் இந்தியாவும் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படையின் 5 எல்சிய தேஜாஸ் போர் விமானங்கள் பிரிட்டன் நாட்டிற்குச் செல்ல இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் உக்ரைன் ரஷ்யாவில் நிலவும் போர் காரணமாக இந்தியா அந்த பிரிட்டன் நாட்டில் நடக்கும் போர் விமான பயிற்சியில் இருந்து இந்திய விமானப்படை வீரர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலை அடுத்து ரஷ்யா மீது பிரிட்டன் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்தது அதனால் பிரிட்டன் நாட்டில் நடக்கும் இந்த போர் பயிற்சியில் இருந்து விலகும் முடிவை இந்தியா எடுத்துள்ளது.
ஏற்கனவே ஒரு முறை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது