நேற்று முன்தினம் இந்தியாவுக்கும், சவுத் ஆப்பிரிக்காவுக்கும் இடையேயான டி20 போட்டியில் ரசிகர்கள் இரண்டு தரப்பாக பிரிந்து அடித்துக் கொண்ட ஒரு வீடியோ வைரலாக சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.
இந்தியாவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. டெல்லியில் பிரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கத்தில் விளையாடி அபார இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு அளித்தது. இருப்பினும் அந்த இலக்கை ஐந்து பால் மிச்சம் இருக்கும்போது சவுத்ஆப்பிரிக்கா முடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்தநிலையில் அந்த ஆட்டத்தின் நடுவில் இந்திய ரசிகர்கள் இரு தரப்பாக பிரிந்து அடித்துக்கொண்ட ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் இரண்டு தரப்புகளும் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கின்றனர். கடைசியில் போலீசார் வந்து அவர்களை பிரித்து வைத்து சமாதானப்படுத்துகின்றனர். எதற்காக இவர்கள் அடித்துக் கொண்டார்கள் என விசாரிக்கையில்..

அதில் ஒரு நபர் முதல் முறையாக ஒரு ஆட்டத்தை நேரலையாக பார்த்ததால் ஆர்வமிகுதியில் இந்திய கொடியை மேலே பறக்க விட்டிருக்கிறார். இதனால் அவருக்குப் பின்னால் இருந்தவருக்கு ஆட்டத்தை முழுமையாகக் கண்டு கழிக்க முடியவில்லை. இதனால் அவரை சற்று கீழே உட்காருங்கள் என அவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு ஏதும் செய்தார்களா இல்லையா என தெரியவில்லை. ஆனால் தற்போது இந்த வீடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Exclusive video from #QilaKotla yesterday East Stand pic.twitter.com/CXgWMOse87
— Pandit Jofra Archer (@Punn_dit) June 10, 2022
