குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து கர்ப்பம் ஆனா பெண் ? | உண்மையில் வெங்கடேஷ் பட் சொல்லவந்தது என்ன ? ஒரு அலசல்

கடந்த ஒரு சில தினங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை வைத்து பல மீம்ஸ்கள் மற்றும் காமெடி வீடியோ எடிட்டிங்களை நம்மால் காணமுடிகிறது. அது என்னவென்றால் அந்த குக் வித் கோமாளி ஷோவில் ஒரு சமையல் வல்லுனராக இருக்கும் வெங்கடேஷ் பட் அவர்கள் சக போட்டியாளர்களிடம் பேசுகையில் ஒரு திருமண ஜோடி நம்முடைய நிகழ்ச்சியை பார்த்ததன் மூலம் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறியிருப்பார். இவர் இப்படி கூறியதை மீம் கிரேட்டர்கல் ஒரு கன்டென்டாக எடுத்துக்கொண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

மேலும் இந்த மாதிரியான ஷோக்களை எல்லாம் எதற்கு தயாரிக்கிறார்கள் என்று விஜய் டிவியையும் கடும் கோபத்தில் திட்டி வருகின்றனர். உண்மையிலேயே குக் வித் கோமாளி பார்த்ததன் மூலம் தான் அவர் கர்ப்பமானாரா ? அது எப்படி சாத்தியம் ? என எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கும். அதனால் அது ஒரு சுத்த பொய் என்று பலரும் அந்த நிகழ்ச்சியைத் திட்டி வருகின்றனர். அதில் அவர் கூறியது என்னவென்றால் IVF சிகிச்சையை அந்த தம்பதியினர் மேற்கொண்டுள்ளனர் என்று. அந்த சிகிச்சையானது செயற்கை கருவுற்றல் ஆகும்.

இந்த சிகிச்சையை செய்ததன் மூலம் சிலருக்கு முதல் முறையிலேயே இரண்டு மாதங்களில் கருவுற்றல் ஏற்படும் அல்லது இரண்டு, மூன்று முறை என தள்ளியும் போகலாம். அதனால் இந்த சிகிச்சையைப் பொறுத்த வரை ஒரு முறை செய்தபின் நல்ல மன வலிமையுடனும், உடல் வலிமையுடனும், சந்தோசமாக நம் வாழ்க்கையை நடத்தவேண்டும். இவை எதையும் கடைபிடிக்காமல் நாம் எப்போதும் சோர்வாகவும், மனவலிமை இல்லாமலும் காணப்பட்டால் நம் வயிற்றில் செயல்படும் அந்த செயற்கை கருவுற்றல் நடக்காமல் போக வாய்ப்புள்ளது.

அதனால் முடிந்த வரை நம்மால் சிரித்து மகிழ என்னென்ன செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்து கொள்ளலாம். சிலர் காமெடி வீடியோக்களை பார்ப்பார்கள், சிலர் இளையராஜா பாடல் எஆர் ரகுமான் பாடல் என கேட்டு மகிழ்வார்கள், ஒரு சிலர் படங்களையும் யூடியூபில் ஏதாவது வீடியோக்களையும் பார்த்து தங்களது மகிழ்ச்சியை தேடிக் கொள்வார்கள். அதே போல வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சியில் கூறிய அந்த தம்பதிகள் தங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் அந்தக் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். தங்களுடைய வாழ்க்கை கவலைகளை எல்லாம் மறந்து மிகவும் மகிழ்ந்து சிரித்து சந்தோஷத்துடன் இருந்திருக்கின்றனர். அதனால் தங்கள் வயிற்றில் தங்கும் குழந்தையும் ஆரோக்கியமாக தங்கியிருக்கிறது.

மேலும் இந்த சிகிச்சை செய்யும்போது நமக்கு மனா அளவிலும், உடல் அளவிலும் பல பிரச்சனைகள் (Side Effects) ஏற்படும் அந்த பிரச்சனையிலிருந்து வெளிவர இந்த நிகழ்ச்சி அவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளது. இதைத்தான் அவர் அந்த அந்த ஷோவில் கூறி இருப்பார். அவர் கூறிய ஒன்றை தப்பாக சித்தரித்து தற்போது நம்முடைய மீம் கிரேட்டர்ஸ்கள் மீம்களை பறக்க விடுகின்றனர். இந்த விஷயம் அந்த தம்பதியருக்கு தெரியவந்தால் அவர்கள் மிகவும் வேதனை படுவார்கள். அதனால் எந்த ஒரு விஷயத்தையும் ஆழம் அறியாமல் நாம் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதனால், என்ன விஷயம் என்பதை நாம் தீர விசாரித்து தான் எது ஒன்றையும் முடிவு செய்ய வேண்டும்.

Spread the love

Related Posts

திமுகவின் B – டீமா விஜய் மக்கள் இயக்கம் ?? பிரசாந்த் கிஷோருடன் ரகசிய சந்திப்பு | வெளிவந்த அதிரடி ரிப்போர்ட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தான் விஜய் இவர் ஐபேக் நிறுவனர் மற்றும் பிரபல அரசியல்

Health Tips | வெயிலுக்கு இதமான, உடல் சூட்டை தடுக்கும் இளநீர், வெறும் வயற்றில் இளநீர் குடிப்பது நல்லதா ?

இயற்க்கை தந்த வரப்பிரசாதம் இளநீர். உடல் சூடு, வயிற்று புண், வாய்ப்புண் எல்லாவற்றிற்கும் நாம் நாடுவது

“கோலிய ஒப்பனிங் அனுப்பிட்டு நான் வெளிய போணுமா ?” | நிருபரின் கேள்விக்கு கோவமாக பதிலளித்த கே எல் ராகுல்

விராட் கோலி குறித்து கேள்வி எழுப்பிய நிருபர் இடம் அதிருப்தியில் பதில் அளித்தார் கே எல்