2022 ஐபிஎல் போட்டி வருகின்ற மார்ச் 26ம் தேதி மும்பையில் துவங்க உள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் சென்னை அணி மற்றும் கொல்கத்தா அணி மோதுகிறது. இந்த ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு ஐபிஎல் நிர்வாகம் சில கோவிட் சம்பந்தமான நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகள் அணி நிர்வாகத்திற்கும் மற்றும் அணியின் விளையாடும் வீரர்களுக்கும் பொருந்தும். அது என்னென்னவென்று விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முதலில் அணி நிர்வாகத்திற்கு என்னென்ன நிபந்தனைகள் என்று பார்க்கலாம்
1.) ஒரு அணி நிர்வாகம் சம்பந்தமில்லாத ஒரு ஒரு வெளியாட்களை இவர்களின் எல்லைக் கோட்டுக்குள் (Bio Bubble) அனுமதித்தால் அந்த அணி நிர்வாகத்திற்கு முதல் முறை 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
2.) இரண்டாவது முறையும் அதே செயல் மீண்டும் தொடர்ந்தால் அந்த அணிக்கு புள்ளி பட்டியலில் இருந்து ஒரு புள்ளி குறைக்கப்படும் (1 Point Will Reduce)
3.) மூன்றாவது முறையும் அதே செயல் தொடர்ந்தால் அந்த அணிக்கு இரண்டு புள்ளிகள் புள்ளி பட்டியலில் இருந்த குறைக்கப்படும் (2 Point Will Reduce)
மேலே அணி நிர்வாகத்திற்கு என்னென்ன நிபந்தனைகள் என்று பார்த்தோம், இப்போது அந்த அணியில் விளையாடும் வீரர்களுக்கு என்னென்ன நிபந்தனைகள் என்று பார்க்கலாம்.
1.) ஏதேனும் ஒரு வீரர் அவர்களின் எல்லைக் கோட்டை (Bio Bubble Breach) விட்டு தாண்டினால் அந்த வீரர் கட்டாயமாக 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் (7 Days Quarantine) தனிமையில் இருக்கும் அந்த ஏழு நாளும் அவருக்கு சம்பளம் கிடையாது.
2.) இரண்டாவது முறையும் அதே தப்பை அவர் செய்தால் ஏழு நாட்கள் தனிமையில் இருப்பதோடு சேர்த்து ஒரு ஆட்டம் ஆட முடியாத நிலைமைக்கு தள்ளப்படுவார்.
3.) மூன்றாவது முறையும் அதே தப்பை அவர் செய்தால் அவர் ஐபிஎல் நிர்வாகத்தால் ஐபிஎல்-லில் இருந்து நீக்கப்படுவார் அவருக்கு பதில் மாற்று வீரரும் கிடையாது.
இவ்வாறாக சில மிகவும் கடினமான நிபந்தனைகளை ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது இவற்றை மீறினால் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.