விக்ரம் படத்தின் 50 ஆவது நாள் விழா கொண்டாட்டத்தின் போது ஒரு நேர்காணலில் பேசிய கமல் அவர்கள் எனக்கு கால் உடைந்து விட்டது என பிச்சை எடுத்து ரசிகர்களை பார்க்க வைப்பது நல்ல கலைஞனுக்கு அழகு அல்ல என கூறியிருக்கிறார். இவர் நடிகர் அஜித்தை தான் இப்படி மறைமுகமாக கூறுகிறாரா என்று அஜித் அவரது ரசிகர்கள் தற்போது இணையத்தில் பொங்கி எழுந்து வருகின்றனர்.
விக்ரம் படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வசூலில் சாதனை படைத்திருக்கிறது. தற்போது இந்த படத்தின் ஐம்பதாவது நாள் விழா கொண்டாட்டத்தின் போது கமல் அவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒரு கேள்வியாக அவரிடம் “நீங்கள் நடித்த படங்களில் நடிப்பதற்கு மிகவும் கடினப்பட்ட ரோல் எது” என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமலஹாசன் நாம் எப்போதுமே நடிப்பதை கடினமாக கருதக்கூடாது. தனக்கு வியர்வை வந்தது, இடுப்பு வலித்தது என இந்த சாக்கு எல்லாம் சொல்லக்கூடாது.
எனக்கு கால் உடைந்தால் கூட கால் உடைந்தாலும் இவர் எப்படி நடனமாடுகிறார் என்று தான் ரசிகர்கள் பார்ப்பார்கள். அதனால் எனக்கு கால் உடைந்து விட்டது என் படத்தை பாருங்கள் என்று மக்களிடம் கேட்பது கோயிலில் பிச்சை கேட்பதற்கு சமம் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவையும் கண்ட சில அஜித் ரசிகர்கள் கமலஹாசன் அஜித் அவர்களை தான் மறைமுகமாக இதில் திட்டுகிறாரா என சமூக வலைதள பக்கத்தில் பொங்கி எழுந்து வருகின்றனர்.
ஏனென்றால் அஜித்தின் ஒரு சில படங்களில் அவர் மிகவும் கடினப்பட்டு சில ஸ்டண்ட் காட்சிகளை செய்யும்போது அவருடைய உடலில் சில பகுதிகளில் பலத்த காயம் ஏற்படும். அந்த காயங்களின் போட்டோக்களும், வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளத்தில் அந்தந்த சூட்டிங் நடக்கும் போது வெளிவரும். ரீசண்டாக வெளியான வலிமை படத்தில் கூட அவர் ஒரு பைக் வீலிங் ஸ்டண்ட் காட்சி செய்யும்போது கீழே தவறி விழுந்து விடுவார். அதனால் அவருக்கு உடலில் ஏகப்பட்ட காயங்கள் ஏற்படும். என அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரும் கூறி இருந்தார்.

அதனால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த வலிமை மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் அவர் பைக் ஓட்டும் போது கீழே விழுந்தும் பிறகு எப்படி எழுந்து நின்று மறுபடி அந்த காட்சியை சாத்தியமாக்கினார் என்பதை அந்த மேக்கிங் வீடியோ விளக்கும். இந்த வீடியோவின் மூலமாக வலிமை படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமும் கிடைத்தது. அதனால் ஒருவர் கீழே விழுந்ததை வைத்து விளம்பரம் தேடுகிறார்களே என்று அப்போது சிலபேர் அஜித்தை திட்டினார்கள். அந்த நிகழ்வை மனதில் வைத்துக் கொண்டுதான் இப்போது கமல் அவர்களும் இப்படி பேசியுள்ளார் என்று அஜித் ரசிகர்கள் கமல் மீது வருத்தத்தில் உள்ளனர்.
தாக்கப்பட்டாரா!!! pic.twitter.com/WFMDhMzG3h
— Bruce (@Wayneetech) August 5, 2022
ஆனால் இந்த வீடியோவில் கமல் யாரையும் குறிப்பிடும் வகையில் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மீரா மிதுன் மீது ஜாமீனில் வெளி வர முடியாத அளவிற்கு பிடிவாரண்ட்
