“டீமில் உள்ள ஓட்டையை அடைக்க இளம் வீரர்கள் தான் தேவை” கோஹ்லியை மறைமுகமாக சீண்டுகிறாரா புதிய கேப்டன் ரோஹித் ??

“டீமில் உள்ள ஓட்டையை அடைக்க இளம் வீரர்கள் தேவை” என்று விராட் கோலியை சீண்டும் வகையில் ரோகித் சர்மா பேச்சால் ரசிகர்கள் குழப்பம்.

ஸ்ரீலங்கா உடனான தொடரில் வெற்றியைக் கண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் “எங்கள் அணியின் உடைய பெஞ்ச் ஸ்ட்ரெங்க்த் (Bench Strength) மிகவும் வலிமை என்று காட்டினோம் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் இருந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இளம் வீரர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், அணியில் உங்கள் இடத்தை நினைத்து நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் அது உங்களை தேடிவரும், அணியின் ஓட்டையை அடைக்க நீங்கள்தான் தேவைப்படுகீறீர்கள், அதை உங்கள் மனதில் வைத்து தொடர்ந்து தயாராக இருங்கள்” என தெரிவித்தார்

இவர் இப்படி சொல்லப்போக அணியின் ஓட்டை என்று குறிப்பிட்டு அணியின் மூத்த வீரரான விராட் கோலியை தான் இவர் சொல்கிறார் என்று ரசிகர்கள் இடையே ஒரு கலக்கம் ஏற்பட்டுள்ளது. வரும் உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலியை அணியிலிருந்து கழட்டி விடவும் ரோகித் சர்மா தயங்க மாட்டார் என்று இந்தப் பேட்டியில் இருந்து கண்கூடாக தெரிகிறது. ஏனென்றால் விராட் கோஹ்லியின் இடத்தில இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் நல்ல ஆட்டத்தை ஸ்ரீலங்கா தொடரில் வெளிபடுத்தியுள்ளார், அதனால்விராட் கோலிக்கு பதில் இவர் டீமில் ஆடவும் வாய்ப்புகள் உள்ளது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் விராட் கோலியின் கடந்த இரண்டு ஆண்டுகளில் புள்ளிவிவரங்களை எடுத்து பார்த்தால் ஸ்பின்னர் வகை பந்து வீசாளர்களுக்கு எதிராக சராசரியாக ஒரு பவுண்டரி அடிக்க 38 பந்துகளில் எடுத்துக்கொள்கிறார். இதை இன்று வரை சரி செய்யவில்லை. இதே நிலை தொடர்ந்தால் டி20 உலகக்கோப்பை அணியில் கண்டிப்பாக இவர் இடத்தை இழக்க நேரிடும் என்றும் தெரிகிறது.

Spread the love

Related Posts

“நான் என்ன தகுதி இழந்தவளா ?” நக்மாவிற்கு MP சீட் ஒதுக்கப்படவில்லை.. ட்விட்டரில் கேள்வி எழுப்பும் நக்மா… பிஜேபியில் சேருவாரா ?

மாநிலங்களவைத் தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததை எதிர்த்து நக்மா காங்கிரஸ்க்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை

Viral Video | கணக்கில் வகுத்தலை சரியாக செய்ய தெரியாமல் தலையை சொரிந்த தலைமை ஆசிரியரை பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளார் ஆட்சியர்

கணக்கில் வகுத்தலை சரியாக செய்ய தெரியாமல் தலையை சொரிந்த தலைமை ஆசிரியரை பொறுப்பில் இருந்து நீக்கி

ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து | நடிகர் விஷாலை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற படக்குழு | ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் விஷாலுக்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு