மாரிமுத்து மரணத்திற்கு இதுவும் காரணமா? எதிர்நீச்சல் சீரியலில் இதை கவனீச்சிங்களா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து இன்று காலை மரணம் அடைந்திருக்கிறார். அவருடைய திடீர் மரணத்தால் அதிர்ச்சியான ரசிகர்களும், நடிகர்களும் தொடர்ச்சியாக தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியலில் கடந்த ஒரு சில வாரங்களாகவே குணசேகரன் அதிகமாக கோபமாக இருப்பது போன்று சீன்கள் தான் வந்து கொண்டே இருந்தது.

அதிலும் குணசேகரன் கத்தி பேசுவது போன்ற டயலாக்குகள் தான் இருந்து வந்தது. இதனால் கூட நடிகர் மாரிமுத்துவிற்கு மாரடைப்பு வர காரணமாக இருந்திருக்குமா? என்று சந்தேகமும் ரசிகர்களின் மத்தியில் எழுந்து இருக்கிறது. அதோடு மேலும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது. அது பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் வெற்றி அடைந்திருக்கிறது. இதற்கு காரணமாக சீரியலில் இயக்குனர் மற்றும் டயலாக் ரைட்டர் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் இந்த சீரியலுக்கு முதுகெலும்பாக தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கேரக்டர் குணசேகரன் தான். குணசேகரன் கேரக்டரில் தன்னுடைய எக்ஸ்ட்ரா நடிப்பு மற்றும் டயலாக்கை போட்டு சீரியல் ரசிகர்களை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தவர் நடிகர் மாரிமுத்து தான்.

மாரிமுத்து கடைசி நொடிகள்… தானே காரில் வந்து ஹாஸ்பிட்டலில் அட்மிட் பிறகு நடந்த அதிர்ச்சி

நடிகர் மாரிமுத்து எத்தனையோ திரைப்படங்களில் நடித்தும் இயக்கியும் இருந்தாலும் அவருக்கு அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் இந்த எதிர்நீச்சல் சீரியல் மூலமாக கிடைத்திருந்தது. சின்னத்திரையில் ட்ரெண்டிங் ஸ்டார் ஆகவே எதிர்நீச்சல் சீரியலுக்கு பிறகு இவர் வலம் வந்து கொண்டு இருந்தார். எதிர்நீச்சல் சீரியலில் இவர் யதார்த்தமாக பேசிய யம்மா ஏய் என்ற வார்த்தை பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. அது மட்டும் அல்லாமல் இவர் வார்த்தைகளே இல்லாமல் தொண்டையை சிருமுவது கூட அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியலுக்கு பிறகு நடிகர் மாரிமுத்துவுக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளும் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளும் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தது. அதுவும் எதிர்நீச்சல் சீரியல் ஆரம்பத்தில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வந்த நிலையில் இப்போது ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனாலேயே மாரிமுத்து அதிகமாக பிஸியாக இருப்பதாக பேட்டிகளில் கூட கூறியிருந்தார். அது மட்டும் அல்லாமல் விஜய் டிவி, ஜீ தமிழ் என போட்டி சேனல்களிலும் கூட இவர் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்தார்.

அதுபோல மாரிமுத்து நடித்த ஜெயிலர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்தியன் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இதனால் இவர் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது கூட இவருடைய மாரடைப்புக்கு காரணமாக இருக்குமா? என்று பலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் கடந்த சில வாரங்களாகவே குணசேகரன் இந்த சீரியலில் கத்தி பேசுவது போன்ற டயலாக் தான் இருந்து வருகிறது.

அதனாலேயே கூட நடிகர் மாரிமுத்து டப்பிங் பேசும்போதும் கத்தி பேசிக் கொண்டிருந்ததால் கூட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற கேள்விகளும் அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் உடல் நலத்தில் அக்கறை கொண்ட மாரிமுத்து எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாமல் அடிக்கடி உடற்பயிற்சிகளையும் செய்து வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் தொடர்ச்சியான வேலைப்பளு மற்றும் அவருடைய கத்தி பேசும் டயலாக் மூலமாகவும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்குமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் இனி குணசேகரன் ஆக யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.இனி யார் வந்தாலும் நடிகர் மாரிமுத்துவின் இடத்தை நிரப்ப முடியாது என்பது ரசிகர்களின் அசைக்க முடியாத கருத்து.

Spread the love

Related Posts

திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில்

“டோனியை வெறுப்பவர்கள் பிசாசாக தான் இருக்கவேண்டும்” – நெத்தியடி பேட்டியளித்த ஹர்டிக் பாண்டியா

ஐபிஎல் குவாலிபையர்-1 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்-

Viral Video | அம்மாவை பார்க்கச்செல்லும்போது கேமராமேனையும் கூடவே கூட்டி சென்று மாட்டிக்கொண்ட மோடி | வீடியோ கசிந்தது

மோடி இன்று அவரின் அம்மாவை பார்க்க சென்ற போது கூடவே கேமராமேன் மற்றும் வீடியோகிராபரை கொண்டு

Latest News

Big Stories