வேலூர் மாவட்டத்தில் இரவோடு இரவாக சாலை அமைக்கும் பணியின் போது இருசக்கர வாகனத்தோடு சேர்த்து சாலை போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் தேர்வாகி பல்வேறு பணிகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோயில் தெருவில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை வேலூர் மக்களை ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது.
காளிகாம்பாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா இவருடைய இருசக்கர வாகனம் ஒன்றை நேற்று இரவு வழக்கம் போல தங்களது கடையின் முன் நிற்பாட்டி விட்டு சென்றுள்ளார். பிறகு காலை எழுந்து பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தெருவில் புதியதாக இரவோடிரவாக போடப்பட்ட ஒரு சாலையால் ஓரம் நின்றிருந்த இருசக்கர வாகனத்தில் சேர்த்து சாலை போட பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போய் வாகனத்தை எடுக்க முயற்சித்தார். ஆனால் சிமெண்ட் கலவை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருப்பதால் அதை அவரால் எடுக்க முடியவில்லை. பின்னர் போராடி உடைத்து வண்டியை மீட்டுள்ளார்.

இது குறித்து பேசிய யுவராஜ் என்பவர் இது என்னுடைய தம்பியின் வண்டி தான் நாங்கள் 11 மணி வரை கடையில்தான் இருந்தோம். அது வரை சாலை போட பட உள்ளதாக எந்த ஒரு தகவலும் எங்களுக்கு வரவில்லை. ஆனால் காலை எழுந்து பார்த்ததும் இரவோடு இரவாக சாலை அமைத்திருக்கின்றனர். சாலையை அமைக்கும்போது அலட்சியமாக அந்த வண்டியையும் சேர்த்து சாலை அமைத்திருக்கின்றனர். இதுகுறித்து ஒப்பந்தத்தை அவர்களிடம் கேட்டால் அலட்சியமாகவும் பதில் சொல்கிறார்கள். இப்போது எங்கள் வண்டி நாசமாகிவிட்டது முன்னறிவிப்பு கொடுத்திருந்தால் நாங்கள் வண்டியை வேறு எங்காவது மாற்றி இருப்போம்.

இப்பொழுது ஒரு மனிதன் யாராவது உறங்கிக்கொண்டிருந்தாள்அவரையும் பார்க்காமல் அவருக்கு மேல் சாலையை போட்டு விடுவார்களா ? மேலும் எங்கள் பகுதியில் போடப்படும் சாலைகள் எல்லாமே கடமைக்கு போடுகிறார்கள். அதில் எந்த ஒரு தரமும் இல்லை தெருவில் உள்ள குப்பைகளை எதையும் அகற்றாமல் சாலை போடுகிறார்கள். இதனால் மக்கள் பணம்தான் வீணாக போகிறது. இனியாவது இந்த அதிகாரிகள் இவற்றைக் கண்காணித்து தரமான சாலை எங்களுக்கு அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
*வேலூர் : நிறுத்தப்பட்ட பைக்குடன் சேர்த்து சாலைக்கு கான்கிரிட் போட்ட விடியா அரசின் விடியல் சந்தி சிரிக்கும் திராவிட மாடல் ஆட்சி* pic.twitter.com/piHoisns34
— Lenin (@MLenin1987) June 28, 2022