ஐடிஐ தேர்ச்சி பெற்றிருந்தால் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 மற்றும் 12ம் பிடித்ததற்கு இணையான கல்வி சான்றிதழ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி எட்டாம் வகுப்பு படித்து விட்டு ஐடிஐ தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றதது போல் சான்றிதழை பெறலாம்….. மேலும் பத்தாம் வகுப்பு படித்து விட்டு ஐடிஐ தேர்ச்சி பெற்றால் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றதது போல் சான்றிதழை பெறலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.
