அண்ணாமலையை புறக்கணியுங்கள் | வன்னியர்களிடம் காடுவெட்டி குருவின் மகள் கோரிக்கை

வன்னியர்கள் யாரும் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்படாதீர்கள் என்று காடுவெட்டி குருவின் மகள் அறிக்கை விட்டுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத

அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-

‘எந்த ஒரு சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டையும் உரிமைகளையும் வன்னியர் மக்கள் கொடுக்கக்கூடாது என்று கூறியது கிடையாது. மற்ற சமுதாயத்திற்கு முன்னின்று இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தவர்களும் வன்னியர்களே. இந்த இட ஒதுக்கீட்டுக்காக 25 உயிர்களை பலி கொடுத்ததும் வன்னியர்களே. ஆனால் இன்று அண்ணாமலை வரலாறு தெரியாமல் வன்னியர் மக்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக போராடும் அமைப்புகளை ஒன்று திரட்டி அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தபோது ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும், எதிர்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியும் வன்னியர்களின் உரிமை பாதிக்கப்படக் கூடாது என்று சட்டமன்றத்தில் குரல் கொடுத்த பொழுது பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் இதைப் பற்றி வாய் திறக்காமல் இருந்தனர்.

தமிழ்நாட்டின் மிகப்பெரும் சமுதாயமான வன்னியர் சமுதாயத்தை அண்ணாமலை எதிர்ப்பது நல்லதல்ல. வன்னியர் மக்கள் கஷ்டத்தில் இருக்கும் பொழுது எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலையையும் பாஜகவையும் நாங்கள் கேட்டுக் கொள்ளவில்லை. மேலும் எங்களை துன்புறுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நம் 3 கோடி வன்னியர் குல சத்திரியர்களை நான் கேட்டுக்கொள்வது நாம் அனைவரும் எந்த கட்சியில் வேண்டுமானாலும் பயணிக்கலாம். நீங்கள் அனைவரும் யாரை வேண்டுமானாலும் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கலாம். நமது உரிமைகளுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை கட்சி பாகுபாடு இன்றி எதிர்ப்பது நமது கடமை. எனவே நம் வன்னியர் மக்கள் மிஸ்டர் அண்ணாமலையையும் பாஜகவையும் புறக்கணிக்க வேண்டும் என்று உங்கள் மாவீரன் காடுவெட்டியார் மகளாக கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

Spread the love

Related Posts

மாஸ்டர் பட நாயகன் ஷாந்தனுவை பிட்டு பட நாயகர் என்று வசை பாடிய ப்ளூ சட்டை மாறன் | விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு

சினிமா படங்களை மிகவும் கடுமையாக விமர்சித்து அதன் மூலம் பிரபலமடைந்தவர் தான் யூடூப்பில் ரெவியூ செய்யும்

PTR கார் மீது செருப்பு அடித்ததை வைத்து அரசியல் செய்யலாம் என அண்ணாமலை போனில் பேசியதாக ஒரு வாய்ஸ் வெளியாகி பரபரப்பாகியிருக்கிறது

பி டி ஆர் வாகனம் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இதை

“வெக்கம், மானம், சூடு, சுரணை இல்லையா ? | பேரறிவாளனுக்கு அடைக்கலம் தரும் திமுகவுடன் கூட்டணி எதற்கு ?” காங்கிரசை வெச்சு செய்த பிஜேபி

வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே கிடையாதா… பேரறிவாளன் வெளியில் வந்ததும் அதை முதலில் கொண்டாடியது