டெல்லியை மையமாகக் கொண்ட ரான்டெக்ஸ் என்ற மருந்து கம்பெனியின் உரிமையாளர் மனைவியை மிரட்டி 200 கோடி பறித்தது தொடர்பான வழக்கில் சுகேஷ் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த கம்பெனியின் தொழிலதிபர் சிறையில் இருக்கிறார். மேலும் அவரை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர அவர் மனைவியிடம் இந்த பணத்தை சுகேஷ் சந்திரசேகர் வாங்கி இருக்கிறார். சுகேஷ் சந்திரசேகர் மட்டும் அல்லாமல் அவர் மனைவி லீனா உட்பட இந்த வழக்கில் மொத்தம் எட்டு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடமும் தொடர்பு வைத்திருக்கிறார் என்ற ஒரு செய்தி தற்போது வெளியே வந்திருக்கிறது. இது தொடர்பாக அவரிடம் விசாரித்தபோது இவர் சுகேஷ் சந்திரசேகர் உடன் காதலியாக இருந்தது விசாரணையில் அம்பலமானது. தற்போது இந்த நடிகை அமலாக்க துறை கண்காணிப்பில் தான் இருக்கிறார். இவர் வெளிநாட்டுக்கு செல்லவும் தற்போது தடை விதித்துள்ளார். சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த ஏழு கோடி மதிப்பிலான விலையுயர்ந்த பரிசு பொருட்களை அமலாக்க பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

இந்த வழக்கில் தற்போது ஒரு புதிய திருப்பமாக 200 கோடியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் அமலாக்கப் பிரிவு குற்றவாளியாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சேர்ந்து இருக்கிறார். இந்த வழக்கு குறித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கின்றனர். அதில் தான் இவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
