சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகத்தில் கார்பன்-டை-ஆக்சைடு இருப்பதற்கான தெளிவான ஆதாரத்தை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் கண்டறிந்துள்ளது. உயர் தொகுதியில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு சூரிய குடும்பத்துக்கு வெளியே முதன்முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் வேற்று கிரக உயிரினங்கள் இருப்பதற்கான முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் கடந்த வருடம் டிசம்பர் மாதம் விண்ணில் அனுப்பப்பட்டு ஜூலை 12-ஆம் தேதி முதல் வண்ணப் புகைப்படம் வெளியிட்டது.
“மீண்டும் காமெடியனாக நடிக்க தயார்” – நடிகர் சந்தானம்

பேரண்டத்தின் வெவ்வேறு வகையான விண்மீன் கூட்டங்கள், தூசு மண்டலங்கள், கோள்கள் போன்றவற்ற்றின் 7 புகைப்படங்களை வெளியிட்டு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள WSP 39B என்கிற கிரகத்தின் வளிமண்டலத்தில் கார்பன் டையாக்சைட் பற்றிய முதல் தெளிவான ஆதாரத்தை ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் இப்போது படம் எடுத்துள்ளது. WSP 39B கிரகமானது பூமியிலிருந்து 700 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதாகும். சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை நெருக்கமாக சுற்றிவரும் ஒரு வாயு கிரகம் எனக் கூறப்படுகிறது.
