தமிழகத்திற்கு ஒருபோதும் பாஜக கால்வைக்க முடியாது என அண்ணாமலையை கடுமையாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்

தமிழகத்திற்கு ஒருபோதும் பாஜக கால்வைக்க முடியாது என தமிழக பாஜகவை கடுமையாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பல போராட்டங்களையும் வாதங்களையும் முன்வைத்து வருகிறார் அண்ணாமலை. இதனால் அதிமுக சற்று அடங்கி இருக்கிறது. பாஜக தற்போது பிரதான எதிர்க்கட்சியாக தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் உண்மையிலேயே பிரதான எதிர்கட்சி அதிமுக தான் என மக்களுக்கு தெரியும்.

இருந்தாலும் திமுக அரசை கண்டித்து தாம்தான் பிரதான எதிர்க்கட்சி என்பது போல பாஜக மாநில தலைவர் கூறிவருகிறார். எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 125 தொகுதிகளில் கைப்பற்றும் என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கூறி வந்தார். இதனை செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்ட போது :- “எல்லா கட்சிகளும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தான் 150 இடங்களை பிடிப்போம் 200 இடங்களை பிடிப்போம் என வாய்க்கு வந்தபடி பேசுவார்கள்.

எல்லோருக்கும் நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசை இருக்கும் அதனால் நாம் எதையும் முடிவு செய்துவிட முடியாது மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். காங்கிரஸ், பாஜக போன்ற தேசியக் கட்சியை மக்கள் என்றுமே அனுமதிக்கமாட்டார்கள். அதற்கு ஒருபோதும் சாத்தியமில்லை வாய்ப்பும் இல்லை என கூறியிருக்கிறார்” ஜெயக்குமார்.

Spread the love

Related Posts

சிம்புக்கு பெண் கேட்டு சென்று அசிங்கப்பட்ட டி.ராஜேந்தர் ?

தனது மகன் சிம்புவுக்கு பெண் கேட்டு சென்று தந்தை டி ராஜேந்தர் அசிங்கப்பட்டதாக தற்போது ஒரு

“நெஞ்சில் தைரியம் இருந்தால் என்னை கரூருக்கு வந்து தொட்டுப் பாருங்கள்” என திமுக அமைச்சருக்கு சவால் விட்ட அண்ணாமலை | காரணம் என்ன ?

நெஞ்சில் தைரியம் இருந்தால் என்னை கரூருக்கு வந்து தொட்டுப் பாருங்கள் என திமுக அமைச்சருக்கு சவால்