சினிமா துறையில் பிரபல பாடலாசிரியராக இருப்பவர் தான் சினேகன் இவர் தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்று பாஜகவை சேர்த்த சின்னத்திரை நடிகர் ஜெயலட்சுமி மீது புகார் அளித்தார். பின்னால் செய்தியாளர்களை சந்தித்து : – “கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கிய சினேகம் என்ற அறக்கட்டளை மூலமாக நான் பலருக்கு உதவி செய்து வருகிறேன் தற்போது சமூக வலைதளத்தில் என்னுடைய ஃபவுண்டேஷன் பெயரை வைத்து சிலர் பணம் வசூலித்து வருகின்றனர் என்று வருமானத்துறை எனக்கு அறிவித்தது.’
இது தொடர்பாக நான் விசாரித்ததில் சினேகம் பவுண்டேஷன் என்ற பெயரை தவறாக பயன்படுத்தி பாஜக பிரமுகரும் நடிகையும் ஆன ஜெயலட்சுமி பண மோசடியில் ஈடுபட்டதனால் தனது வழக்கறிஞர் மூலமாக ஜெயலஷ்மிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் சினேகன்
இந்த நிலையில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி அவர்கள் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் :- “நான் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு பதிவு எண், நீதிமன்ற அங்கீகாரம் என அனைத்து பத்திரங்களும் என்னிடத்தில் சரியாக உள்ளது. மேலும் என்னுடைய அறக்கட்டளையின் பேரில் மக்களுக்கு எவ்வளவு நல்லது செய்து வருகிறேன் எனது சமூகவலைதள பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டே வருகின்றேன். ஆனாலும் சினேகன் என் மீது வேண்டுமென்றே குற்றம் சாட்டி என்னுடைய நற்பெயரை கெடுக்க விரும்புவது என் மீது கலங்கம் விளைவிக்க நினைப்பது மிகவும் தவறான ஒன்று.
“திறந்து காட்டு….” என கேட்ட ரசிகர் | தக்க பதிலடி கொடுத்த குக் வித் கோமாளி பிரபலம்

மேலும் அவர் நான் தனிமையில் அமர்ந்து பேசி அறக்கட்டளைக்கு நன்கொடை வசூலிப்பதாக கூறியிருக்கிறார். அவரும் ஒரு அறக்கட்டளை நடத்துகிறார், அவரும் அப்படி தன் வீட்டு பெண்களை தனிமையில் அமர வைத்து பேசி நன்கொடை வசூலிக்கிறாரோ என கேள்வியும் கேட்டுள்ளார். கண்டிப்பாக திமுக தான் இதற்கெல்லாம் காரணம். ஏனென்றால் அவர் இருக்கும் கட்சியான மக்கள் நீதி மையம் திமுகவுடன் இணைந்து விட்டது. அதனால் தான் கமலஹாசனும் திமுகவுக்கு படங்களை நடிக்கிறார். அவரை தற்போது நடிக்க வைத்து திமுக விலைக்கு வாங்கிவிட்டது. மேலும் அவர்களுக்கு அதிக பணம் கொடுத்து தங்களது நிறுவனத்தின் பெயரை கெடுக்குமாறு கமலஹாசனிடம் கூறியுள்ளனர்” என அவர் கூறியுள்ளார்.
