டிக் டாக் பிரபலம் ஜெஸ்ருதி காணாமல் போய்விட்டார் என அவருடைய அம்மா கதரும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
டிக் டாக் மூலம் பிரபலமடைந்த குடும்பம் தான் ஜெஸ்ருதியின் குடும்பம். இவர் தன்னுடைய அம்மா மற்றும் அண்ணனுடன் சேர்ந்து அலப்பறை செய்யும் வீடியோக்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும். குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படியான ஒரு அண்ணன், இப்படியான ஒரு தங்கச்சி, இப்படியான ஒரு அம்மாதான் எல்லோருக்கும் அமைய வேண்டும் என்று பொறாமைப்படும் அளவிற்கு இவர்களுடைய குடும்பம் இருக்கும்.
“ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஒரு தேசப்பிதா”- இஸ்லாமிய இமாம் அமைப்பின் தலைமை இமாம் புகழாரம்

இந்த வகையில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்த அவருடைய அண்ணன் ஷார்ட் பிலிம் களில் நடிக்க சென்று விட்டார். இவருக்கு ஆர்யாவுடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்த நிலையில் இவருக்கு கல்யாணமும் ஏற்பாடு செய்தனர். ஏற்கனவே காதலித்த பையனை இரு வீட்டாரின் சம்மதத்துடன் கல்யாணம் செய்து முடிக்க அந்த போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து சந்தோஷப்பட்டார் ஜெஸ்ருதி. ஆனால் தற்போது எதிர்பாராத விதமாக இவரும் அவருடைய அப்பாவும் பத்து நாட்களாகவே வீட்டில் இருந்து மாயமாக இருக்கின்றனர். என்ன காரணம் எங்கு சென்று இருக்கிறார்கள் என ஒரு தகவலும் தெரியவில்லை.


இதனை ஒரு வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார் அவருடைய அம்மா. இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். சந்தோசமாக இருந்த குடும்பம் எப்படி நிலை குலைந்து போய்விட்டது என பலரும் பரிதாபப்பட்டனர். இதற்கெல்லாம் காரணம் நடிகர் ஆர்யா தானா என்றும் சிலர் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர். ஏனென்றால் இவ்வளவு நாளாக சந்தோஷமாக இருந்த குடும்பத்தில் இவர் எப்போது ஆர்யா படத்தில் நடிக்க செல்கிறார் என்று செய்தி வந்ததோ அதிலிருந்து இவர்களது குடும்பத்தில் இப்படி ஆகிவிட்டது என கூறி வருகின்றனர். இருப்பினும் உண்மை செய்தி என்னவென்று இன்னும் வெளிவரவில்லை.
