நடிகர் ஜி மாரிமுத்து அவர்கள் பெண்கள் குனிந்து நடந்தால் தான் அழகாக இருக்கும் நிமிர்ந்து நடந்தால் பார்க்க நல்லாவே இருக்காது என நடிகர் பேசியிருப்பது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
வெள்ளித் திரையில் பல படங்களில் குணசித்திர வேதங்களில் தோன்றி மக்கள் மனதில் மறக்க முடியாத ஒரு நடிகராக இருக்கிறார். இவர் தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் நடித்து வருகிறார், சமீபத்தில் இந்தியில் தனுஷ் உடன் அத்ராங்கி ரே படத்திலும் நடித்திருந்தார். தானே இயக்குனர் என்பதால் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு எளிதில் உயிர் கொடுத்து அந்த கதாபாத்திரத்தை அப்படியே கண் முன் நிறுத்தும் ஒரு கைத்தேர்ந்த நடிகர் தான் இவர். இவர் நடித்து வெளிவந்த பரியேறும் பெருமாள் படத்திற்காக இவருக்கு ஏகப்பட்ட விருதுகள் அளிக்கப்பட்டது. மேலும் தற்போது இவர் பேசி வரும் அனைத்தும் சர்ச்சைகள் ஆக மாறி வருகிறது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை :- கைதான தமிழ் பட நடிகர்


அந்த வகையில் தற்போது பெண்கள் குனிந்து நடந்தால் தான் நன்றாக இருக்கும் நிமிந்து நடந்தால் பார்க்க நல்லாவா இருக்கும் என கேட்டுள்ளார். உங்களுக்கு பிற்போக்கு கருத்துக்கள் இருக்கின்றது என தொகுப்பாளர் கூறியதற்கு ஆமாம் பெண்கள் புடவை கட்டி ஆடிக் கொண்டு வர முடியாது. ஆணுக்கு கொஞ்சம் பின்னால் நடந்து வருவதுதான் தமிழர் பண்பாடு என அவர் கூறினார். இந்த கருத்துக்கு பரவலாக எதிர்ப்புகளை தற்போது கிளம்பி வருகிறது. அவர் சீரியலில் எப்படி இருக்கிறாரோ அது போல தான் நிஜ வாழ்க்கையிலும் இருக்கிறார் என திட்டி வருகின்றனர்.
