தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தற்போது முன்னணியில் இருக்கும் நிறுவனம் தான் ஜியோ. ஜியோவுடைய வாடிக்கையாளர்கள் தற்போது குறைந்து விட்டதாக டிராய் அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் மேல் வாடிக்கைளர்களை இழந்து விட்டதாகவும். அந்த நேரத்தில் பாரதி ஏர்டெல் மற்றும் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் அதிகரித்து விட்டதாகவும் மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து போதிலும் ஜியோ நிறுவனம் தொடர்ந்து டெலிகாம் இண்டஸ்ட்ரியில் ஒரு முக்கிய புள்ளியாகவே இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் சந்தையில் 36 சதவீதத்துடன் அதிக பங்கிணை பெற்று முன்னிலையில் உள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனம் 30 சதவீதம் பெற்று இரண்டாவது இடத்திலும், வோடபோன் ஐடியா நிறுவனம் 23 சதவீத பங்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜியோ சலுகை கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை அடுத்து பலர் பி.எஸ்.என்.எல். சேவையில் இணைய துவங்கி விட்டனர்.