மானுடவியல் ரீதியாக கடவுள் கூட உயர் சாதியே கிடையாது, சிவன் கூட பட்டியல்இனத்தவர் அல்லது பழங்குடியினர் தான் என்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சாந்தி ஸ்ரீ துலிப்புடி பண்டிட் கூறியுள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாலின நிதியில் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் சிந்தனைகள் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியது என்னவென்றால் மனுஸ்ம்ரிதியில் பெண்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளது மிகப்பெரிய பின்னடைவு, அதில் பெண்கள் என்பவர்கள் சூத்திரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது எந்த பெண்ணும் தன்னை பிராமணர் அல்லது வேறு எந்த சாதி என்றும் குறிப்பிட முடியாது அவர் எந்த சாதி ஆண் மகனை திருமணம் செய்கிறாரோ, அந்த ஆண் மகனின் சாதியில் பெண் ஐக்கியமாகி விடுகிறார். அதாவது கணவர் எந்த சாதியோ அதே சாதிதான் பெண்ணுக்கும் வரும் என அதில் கூறியுள்ளது.

இது பெண்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு, இன்று சாதிய வன்முறைகள் கொலைகள் அதிகமாக நடக்கின்றது. ஆனால் எந்த கடவுளும் உயர்சாதியை சேர்ந்தவர் இல்லை. மானுடவியல் ரீதியாக நம்முடைய கடவுளின் தோற்றம் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும். எந்த கடவுளும் பிராமணர் கிடையாது சத்திரியரும் கிடையாது. கடவுள் சிவன் கண்டிப்பாக பட்டியல் இனத்தவர் அல்லது பழங்குடியினராகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் கல்லறையிலும் கழுத்தில் பாம்புடனும் சிறிய அளவு ஆடைகளுடனும் உள்ளார். பிராமணர்கள் கல்லறையிலும் கழுத்தில் பாம்புடனும் இருப்பார்களா என நாம் நினைத்து கூட பார்க்க முடியாது.
மானுடவியல் ரீதியாக கடவுள்களான லட்சுமி, சக்தி தேவி, ஜெகன்நாதர் கூட உயர் சாதியில் இருந்து வந்தார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஜெகன்நாதர் கூட பழங்குடியினர் தான். மிக மிக மனித நேயம் அற்ற பாகுபாட்டை நாம் ஏன் தொடர்ந்து வருகிறோம் ? அம்பேத்கரின் சிந்தனைகளை கடைப்பிடித்து இந்த வேறுபாட்டை மறுபரிசீலனை செய்வது முக்கியமானது. ஹிந்துத்துவம் என்பது மதம் அல்ல அது வாழ்வியல் முறை வாழ்வியல் முறையாக இருந்தால் நாம் ஏன் விமர்சனத்திற்கு அஞ்சி இருக்க போகிறோம் ? நம்முடைய சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் கவுதம புத்தர் தான்” இவ்வாறு அவர் அந்த நிகழ்ச்சியில் பேசினார்.
