2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்பப் பெயர் பற்றி அவதூராக பேசியதால் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2019 மக்கள் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்பப் பெயர் பற்றி அவதூறாக பேசியிருக்கிறார் ராகுல் காந்தி. இதனால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர் அவருக்கு நீதிமன்ற ஜாமினும் வழங்கி இருக்கிறது.

கர்நாடகாவின் கோளாறில் நடந்த பிரச்சாரத்தில் அவதூறாக பேசிய புகாரில் ராகுலுக்கு எதிராக சூரத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
