புது பட ரிவியூ | விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாராவின் காத்துவாக்குல 2 காதல் படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

7 ஸ்கிரீன் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாராவை ரெடின் கிங்ஸ்லி, பிரபு போன்ற பல உச்ச நட்சத்திரங்கள் நடித்து இன்று திரைக்கு வந்திருக்கும் படம் தான் காத்துவாக்குல 2 காதல். பிறந்ததிலிருந்து தனக்கு அதிர்ஷ்டம் இல்லை எனவும் தான் ஒரு துரதிர்ஷ்டசாலி எனவும், தான் அம்மாவோடு இருந்தால் நம்முடைய துரதிர்ஷ்டம் அம்மாவுக்கும் வந்துவிடும் அதனால் அம்மாவை விட்டு சற்று ஒதுங்கி இருக்கலாம் என்று சிறுவயதிலேயே ஊரை விட்டு ஓடி வந்து தனிமையில் வாழும் கதாநாயகன். ஒருகட்டத்தில் வளர்ந்த பிறகு அவனுக்கு இரண்டு காதல் மலர்கிறது சிறுவயதில் இருந்தே அம்மாவின் அன்பு இல்லாததால், அந்த இரண்டு பெண்களையும் அதிகமாக நேசிக்கிறார். ஆனால் அவர்கள் இருவரும் இரண்டு பேரில் ஒருவரை தான் காதலிக்க வேண்டும், மணக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றனர். இதற்குப் பின்பு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

கதையைப் பொறுத்தவரை ஒரு ரொமான்டிக் காமெடி படத்திற்கு எப்படிப்பட்ட ஒரு கதை தேவையோ அதற்கான கதை. கதை தேர்வு அருமை. இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணை காதலித்து பார்த்திருப்போம் ஆனால் இரண்டு பெண்கள் ஒரு ஆணை காதலிப்பது போல கதை தமிழ் சினிமாவில் அவ்வளவாக வந்ததில்லை. இந்த கதையை தேர்ந்தெடுத்ததற்கு விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுக்கள்.

திரைக்கதையை பொறுத்தவரை முடிந்த அளவுக்கு தொய்வில்லாமல் சலிப்பில்லாமல் நகர்த்த முயற்சிக்கிறார் இயக்குனர். முதல் பாதியில் கதையை ஒரு நேர்கோட்டில் கொண்டு வர கொஞ்சம் தாமதமாகிறது. அந்த தாமதத்தை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் திரைக்கதையில் எந்தவித தொய்வும் இல்லாமல் ஓரளவிற்கு டீசன்டாகவே நகர்கிறது. வழக்கமான காதல் படங்களில் வருவது போல காட்சி அமைப்பு இல்லாமல் சற்று புதிய காட்சியமைப்புகள் படத்தில் காண முடிகிறது அதன்பிறகு இசையைப் பற்றி சொல்லவே வேண்டாம் அனிருத் எப்போதும் போல பிரித்து மேய்ந்திருக்கிறார்.

அதன்பிறகு எல்லோருடைய நடிப்பும் அருமை குறிப்பாக விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை விட ஒருபடி மேலே அசத்தியிருக்கிறார் சமந்தா. இந்த கதைக்கு எப்படிப்பட்ட ஒரு பர்பாமன்ஸ் தேவையோ அதைவிட ஒரு படி மேலாகவே கொடுத்திருக்கிறார். நயன்தாரா எவ்வளவு பெரிய அனுபவம் வாய்ந்த நடிகையாக இருந்தாலும், சமந்தாவுடன் மெனக்கெட்டு நடிப்பதில் சற்று தோல்வியுற்று இருக்கிறார் என்பதை படத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. நயன்தாராவுக்கு முன்பு இருந்தது போல் அந்த வசீகரம் இப்போது இல்லை ஆனால் சமந்தா அந்த வசீகரத்தை நன்றாகவே திரையில் காட்டி ரசிகர்களை கட்டிப் போட்டிருக்கிறார்.

சில இடங்களில் விஜய்சேதுபதியின் சில காமெடி ரியாக்சன்கள் சிரிக்க வைக்கிறது. ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறனின் காமெடிகள் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. நெகட்டிவ் என்று சொன்னால் படத்தின் நீளத்தை சொல்லலாம் படத்தில் 20 முதல் 25 நிமிடங்கள் வரை கட் செய்து தூக்கி இருந்தால் இந்த படம் இன்னுமும் சூப்பராக வந்திருக்கும். நடுவில் வரும் அம்மா சென்டிமென்ட் சற்று கதைக்கு தேவை இல்லையோ என தோன்ற வைக்கிறது. ஒட்டுமொத்தமாக நண்பர்களுடனும், உறவினர்களுடனும், காதலர்களுடனும் சென்றால் ஒரு ஜாலியான படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.

ஸ்ருதி ஹாசனின் தொப்புளில் வேலையை பழகிக்கொண்ட காதலன் | அப்படி என்ன செய்தார் தெரியுமா ??

நீங்கள் ரொமான்டிக் காமெடி படங்களை விரும்பி பார்ப்பவர் என்றால் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம், பொதுவான சினிமா ரசிகர் என்றால் உங்களையும் இந்த படம் கவர வாய்ப்பிருக்கிறது, எந்த விதத்திலும் பாரமாக அமையாது. அதனால் நிச்சயம் ஒருமுறை பார்க்கக்கூடிய அளவிற்கு விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார்.

Kingwoods Rating :- 3/5

Spread the love

Related Posts

இளசுகளே உஷார் …. ஹார்ட் எமோஜி அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை | அதிரடியாக அறிவித்த அரசாங்கம்

சவுதி அரேபியாவில் வாட்ஸ் அப்பில் ஹார்ட் எமோஜிகளை அனுப்பினால் சிறை தண்டனை என அதிரடியான ஒரு

“காண்டம்ன்ன என்ன ? அத எதுனால பயன்படுத்தனும்ன்ணு இங்க யாருக்கும் தெரில…” – சாய்பல்லவி ஓபன் டாக்

நடிகை சாய் பல்லவி ஒரு சமீபத்திய நேர்காணலில் ஆணுறை பற்றியும் பெண்கள் உடுத்தும் உடை பற்றியும்