2022 ஆண்டு வெளியான படங்களில் சர்வதேச அளவில் விக்ரம், RRR படங்களை முந்தி 2 ம் இடத்தை பிடித்த கடைசி விவசாயி

லெட்டர் பாக்ஸ் என்ற சர்வதேச திரை விமர்சனம் செய்யும் தளத்தில் இந்த ஆண்டில் பாதி நாட்கள் நிறைவடைந்த நிலையில் இந்த பாதி ஆண்டில் வெளியான உலகத்தரம் மிக்க படங்கள் லிஸ்டில் தமிழ் படமான கடைசி விவசாயி சர்வதேச அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது.

லெட்டர் பாக்ஸ் எனப்படும் இணையதளம் சர்வதேச அளவில் திரை விமர்சனம் செய்யும் ஒரு நிறுவனமாகும். அந்த ஆப்-பிள் நாம் பார்த்த படங்களை எல்லாம் ரிவ்யூ செய்து அதற்கு தகுந்தார் போல ரேட்டிங் கொடுக்கலாம். ஏறத்தாழ imdb மூவி ரேவியூ தளத்தை போன்று தான் இதுவும் செயல்படுகிறது. தற்போது இந்த லெட்டர் பாக்ஸ் ஆப் இந்த 2022 ஆம் ஆண்டு ஆறு மாதங்கள் அதாவது பாதி வருடமே முடிந்திருக்கும் நிலையில் இந்த பாதி வருடத்தில் வெளியான உலகத்தரம் மிக்க படங்கள் என்று டாப் 25 படங்களின் லிஸ்ட் எடுத்தனர்.

அதில் ஒட்டுமொத்தமாக நாலு இந்திய படங்கள் இடம்பெற்று இருந்தது. குறிப்பாக அந்த நாலு படமும் தென்னிந்திய படங்கள் தான். இந்தி படங்கள், மராத்தி படங்கள் போன்ற வடஇந்திய படங்கள் ஒன்று கூட அந்த டாப் 25 லிஸ்டில் இல்லை. தற்போது இந்த நாலு படங்களில் மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி போன்றோர்கள் நடிப்பில் வெளிவந்த கடைசி விவசாயி இரண்டாம் இடத்தையும், ராஜமௌலியின் பிரம்மாண்ட இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படம் 6வது இடத்தையும், கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் 11 வது இடத்தையும், மலையாளத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற பட என்கிற படம் 21 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறது.

இதில் ஆர் ஆர் ஆர் மற்றும் விக்ரம் போன்ற பெரிய படங்களை முறியடித்து ஒரு ஸ்மால் பட்ஜெட் படமாக வெளிவந்த கடைசி விவசாயி படம் சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.கடைசி விவசாயி திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியானது ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்யவில்லை இந்த படத்தில் விஜய் சேதுபதி, யோகிபாபு தவிர்த்து வேற எந்த நடிகர் நடிகைகளும் மக்களுக்கு தெரிந்த முகமில்லை. ஆனாலும் இந்த படத்திற்கு ஏகப்பட்ட நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.

என்னதான் விமர்சனம் நல்லதாக இருந்தாலும், இந்த படத்தை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும் இந்த படம் OTT-யில் வெளியான பிறகு ரசிகர்கள் இந்த படத்தை திரையரங்கில் பார்க்க தவறி விட்டோமே என நினைக்கக் கூடிய அளவிற்கு அவர்களை கவர்ந்தது. இருந்தாலும் சர்வதேச அளவில் இரண்டாம் இடம் பிடிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதனை செய்து காட்டியிருக்கும் கடைசி விவசாயி படத்திற்கு ரசிகர்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

மேலும் ஆர் ஆர் ஆர் படத்திற்கும், விக்ரம் படத்திற்கும், மலையாள படமான பட படத்திற்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நான்கு படங்களை தவிர்த்து வேறு எந்த இந்திய
படமும் 2022கான அந்த டாப் 25 சிறந்த சர்வதேச திரைபடங்கள் லிஸ்டில் இல்லை. மேலும் இந்த லிஸ்டில் kgf இரண்டாம் பாகம் திரைப்படம் இல்லாமல் போனது ரசிகர்களை அதிர்ச்க்குள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

Viral Video | உபி-யில் சிறுவனை கடித்த நாய் | வலியால் துடி துடித்த சிறுவனை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்த கொடூர பெண்மணி

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் லிப்டுக்குள் சிறுவனை நாய் கடித்த நிலையில் நாயின் உரிமையாளர் இதனை கண்டும்

“அண்ணாமலைக்கு கூடுவது காக்கா கூட்டம்” | சரமாரியாக விமர்சனம் செய்த செல்லூர் ராஜு

அதிமுக-வை துரும்பு அளவுக்கு விமர்சித்தால் நாங்கள் தூண் அளவுக்கு பாஜகவை விமர்சிப்போம் என செல்லூர் ராஜூ

“சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி” – இஸ்ரோ தலைவர் சோம்நாத் | எதற்காக அவ்வாறு கூறினார் ?

சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி எனக் கூறி தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் இஸ்ரோ