என் ரசிகைகள் உங்களுடைய புகைப்படங்களை பதிவிடுங்கள் நான் உடல்நலம் சரியாகி விடுவேன் | சீடர்களுக்கு அன்புக்கட்டளை விடுத்த நித்தி

கடந்த சில தினங்களாக நித்தியானந்தா உயிருக்கு போராடி வருவதாகவும் அவர் உடல்நிலை சரியாக இல்லை எனவும் ஒரு செய்தி பரப்பப்பட்டது. தற்போது அதற்கு ஒரு புதிய பதிலை அளித்திருக்கிறார் நித்யானந்தா.

நித்தியானந்தா முதலில் தனது ஆசிரமத்தை திருவண்ணாமலையில் திறந்தார். அங்கிருந்து அவர் பல கோடிகளை சம்பாதித்து பிறகு தமிழகம் எங்கும் கிளைகள் தொடங்கினார். அதன் பிறகு கைலாசம் என்று ஒரு புதிய நாட்டை உருவாக்கினார். அந்த நாட்டிற்கு வருவதற்கு சில நிபந்தனைகளையும் அவர் கூறியிருந்தார். அப்போது அந்த டாபிக் மிகவும் பிரபலமடைந்தது. அவரின் பேச்சில் மயங்கிய சில ரசிகைகள் அவருடனேயே ஆசிரமத்தில் தங்கி தங்களது பொழுதை கழிக்கின்றனர்.

ஆனால் ஒரு சில நேரங்களில் அந்த ஆசிரமத்தில் இருந்து பாலியல் புகார் வந்ததால் இவரை வழக்குப்பதிவு செய்து சிறையிலும் சிறிது நாட்கள் அடைத்தனர். இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் பேர்போனவர் தான் நித்யானந்தா. தற்போது உயிருக்கு போராடி வருவதாக ஒரு செய்தி சமூக வலைதளம் எங்கும் தீயாய் பரவுகிறது. நித்யானந்தாவிடம் என்னதான் கோடி கோடியாய் பணம் இருந்தாலும் பல நாடுகளில் தேடப்படும் குற்றவாளியாக அவர் இருப்பதால் தனி விமானம் அமைத்து எங்கேயும் அவர் மருத்துவ உதவிக்காக செல்ல முடியவில்லை.

அதனால் அவரைக் கண்காணிக்க 27 மருத்துவர்கள் அவரின் இருப்பிடத்திற்கு சென்று அவருக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர். இதனை தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார் அவர். எந்த பெரிய பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் என்னால் சரியாக உணவை உட் கொள்ள முடியவில்லை, எந்த உணவை சாப்பிட்டாலும் அதை உடனே வாந்தி எடுத்து விடுகிறேன், அதேபோல எனக்கு உறக்கமும் இல்லாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். உடலில் எந்த அசைவும் ஏற்படவில்லை எனவும் நித்திய சிவ பூஜையில் இருக்கவேண்டியவன் நிர்விகல்ப சமாதியில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

என்னிடம் அதிகமாக பணம் இருக்கிறது. அதனால் எனக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம் நீங்கள் எனக்கு உண்மையிலேயே உதவ நினைத்தால் எனது ரசிக ரசிகைகள் உங்களின் புகைப்படங்களை பதிவேற்றங்கள். அதை பார்த்து நான் பக்தர்களோடு உள்ளுணர்வில் இணைந்திருக்கிறேன். அதை நான் மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறேன். விரைவில் எனக்கு எல்லாம் சரியாகிவிடும் நான் வழக்கமாக உடல்நிலைக்கு திரும்பியதும் பழையபடி தரிசனங்கள் தடையில்லாமல் தொடங்கும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

Spread the love

Related Posts

ரஜினி சினிமாவுக்கு வந்து 47 வருடம் நிறைவடைந்ததை விமர்சையாக கொண்டாடிய குடும்பத்தினர்

தற்போது நடிகர் ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்த 47 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் அவரது குடும்பத்தினர் வாழ்த்துக்களை

நடிகராக புதிய அவதாரம் எடுத்த அண்ணாமலை | படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு | மேலும் படத்தின் சுவாரசிய தகவல்கள் என்னென்ன ?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு யூடிபில்

பிகினி புகைப்படம் கேட்ட ரசிகருக்கு பிகினி படத்தை பதிவேற்றி பதிலடி கொடுத்த நடிகை மாளவிகா | அப்படி என்ன செய்தார் ?

மாளவிகா மோகனன் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக இருக்கிறார். இவரின் கவர்ச்சி