கள்ளக்குறிச்சி மாணவி இறந்தது தொடர்பான வன்முறை விவகாரத்தில் ஆதிதிராவிடர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்கள் என ஆங்கில நாளேடு ஒன்று கூறிய செய்தியால் ஆவேசம் அடைந்த திருமாவளவன்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சக்தி ஸ்கூலில் படித்து வந்த ஸ்ரீமதி என்னும் மாணவி 13ஆம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். இது உண்மையிலேயே தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்தனர். மேலும் பல வன்முறைகள் வெடித்து பொருள் சேதங்கள் அதிகம் ஆனது. அதனால் அதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க இந்த வழக்கை சிபிசிஐடி மாற்றி அமைத்தது கோர்ட்.
தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு வந்துள்ளது. மேலும் இந்த கலவரத்தின் போது ஆயிரக்கணக்கான மாணவர்களின் டிசியை எரித்துள்ளனர். மேலும் அந்த ஊர் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நாளையிலிருந்து தொடங்குவோம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார். தற்போது அந்த மாணவியின் இறப்பிற்காக அங்கு வெடித்த கலவரத்தில் ஆதிதிராவிடர்கள் காரணமாக உள்ளனர் என உளவுத்துறை வட்டாரங்கள் கூறி இருப்பதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி பதிப்பிட்டுள்ளது.

இது திருமாவளவனின் கண்ணில் பட அவர் ஆகாசம் அடைந்து தனது ட்விட்டர் பக்கத்தில் அது குறித்து எதிர்ப்பினை தெரிவித்தார் அப்போது பேசியவர் :- மாணவி ஸ்ரீமதி கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதிலிருந்து திசை திருப்பி பள்ளியைத் தாக்கியது யார்? கொளுத்தியது யார்? என்று விவாதத்தை மடைமாற்றிவிட்டு மாணவியின் குடும்பத்திற்கு எதிராகச் சிலர் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர். அந்தச் சதிக்கும்பலுக்குத் துணைபோகும் …..

வகையில் தற்போது உளவுத்துறையின் நடவடிக்கைகளும் அமைவதாக உள்ளது. கீழுள்ள ஆங்கில நாளேட்டுச் செய்தி உள்நோக்கத்துடன் கூடியதாக உள்ளது. உளவுத் துறையிலுள்ள சாதிய வாதிகளின் சதியாகவே தெரிகிறது. இம்மாதிரியான தகவலை ஊடகத்திற்கு அளித்த உளவுத்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்….. அரசுக்கு அளித்த இரகசிய தகவல்களை ஊடகத்தில் கசியவிடுவது ஏன்? இத்தகவலே தவறானது.
இது ஆதிதிராவிடர் மற்றும் விசிகவுக்கு எதிரான அரசியல் சதியாகும். பள்ளியைக் கொளுத்தியதும் ஆதி திராவிடருக்கெதிராக சாதிய வன்மத்தைக் கக்குவதும் ஸ்ரீமதியின் சாவுக்குக் காரணமானவர்களே என்பதை அறியமுடிகிறது” என கூறினார்.