பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ரஜினியுடன் நான் நடிக்கத் தயார் என கமல் திட்டவட்டமாக பதில் கூறியுள்ளனர்.
விக்ரம் படம் கடந்த ஜூன் 3-ம் தேதி வெளியாகி வெளியான எல்லா இடங்களிலும் வசூலிலும் பொசிட்டிவ் ரெஸ்பான்ஸ்லும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் வெளிநாடுகளிலும் விக்ரம் படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது என திரைத்துறையை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த படம் உலக அளவில் 150 கோடி வசூல் செய்ததாகவும், அதில் 100 கோடி இந்தியாவிலேயே வசூல் செய்து விட்டதாகவும் கூறி வருகின்றனர். மேலும் இந்த வசூல் 350 முதல் 400 கோடி வரை தொடர வாய்ப்புள்ளது எனவும், நடுவில் படங்கள் ஏதும் வரவில்லை என்றால் 500 கோடி வசூலையும் இந்த படம் தொடர்வதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன என சினிமா வணிக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

அப்படி இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என இப்படி ஒரு வரவேற்பு என்று கேட்கலாம், ஆனால் இந்த படத்தில் கமல்ஹாசன் ஐந்து வருடங்களுக்கு பிறகு நடிக்கும் முதல் படம் என்பதால் அதுவே ஒரு எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. மேலும் படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிப்பதால் இந்த படம் எல்லா இடங்களிலும் வசூலில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் இந்த படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாட இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கமல் கார் ஒன்றைப் பரிசளித்தார்.
நேற்று சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசாக அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய திரு கமலஹாசன் அவர்களிடம் நீங்கள் ரஜினியுடன் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர் “நான் அவருடன் நடிக்க தயார், நீங்கள் இந்த கேள்வியை ரஜினியிடமும் லோகேஷ் கனகராஜிடம் தான் கேட்க வேண்டும்” என திட்டவட்டமாக பதில் கூறியுள்ளார். மேலும் இந்த செய்தியை கேட்ட கமல் ரஜினி ரசிகர்கள் என இரண்டு பேருமே சந்தோஷத்தில் உள்ளனர். கூடிய சீக்கிரமே ரஜினி மற்றும் கமலை திரையில் பார்க்க ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.
