கமல் விஜய் சேதுபதி மலையாள நடிகர் ஃபகத் பாசில் என அனைவரும் நடித்து ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வர காத்திருக்கும் படம் தான் விக்ரம்.
4 வருடங்களுக்கு பிறகு தமிழில் வெளியாகவிருக்கும் முதல் கமலஹாசன் படம் என்பதால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயங்கி வருவதால் இன்னும் இந்த படத்திற்கு ஒரு படி மேலே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏன் என்றால் இவரின் முந்தைய படங்களான மாஸ்டர். கைதி, மாநகரம் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
அதனால் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து எடுக்கும் நோக்கில் லோகேஷ் கனகராஜ் கமலஹாசனை வைத்து நல்ல ஆக்சன் படம் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியீடு நேற்று நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. அப்போது அதில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அந்த டிரைலரை பார்த்த அவர் மிகவும் அதிர்ந்து போனார். ஏனென்றால் அந்த ட்ரெய்லரில் கமல் அவர்கள் ஒரு வசனம் பேசுவார் அது என்னவென்றால் “இங்க விடியலே தர போறதே நான் தான்” என்று ஒரு வசனம் இருக்கும் அந்த வசனத்தை திமுக சட்டமன்ற தேர்தலில் வெல்வதற்கு முன்பு நாங்கள் தான் தமிழ்நாட்டுக்கு தரப்போகிறோம் என்று பிரச்சாரம் செய்து தான் ஆட்சியை கைப்பற்றியது. தற்போது கமல் அதை விமர்சிக்கும் வகையில் விடியல் என்ற வார்த்தையைப் பற்றி ட்ரைலரில் கொள்ளப்பட்டதால் அதை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
