ஹைதராபாத் சென்று சென்னை திரும்பிய கமலஹாசனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி.
பிக் பாஸ் நிகழ்ச்சி அரசியல் நிகழ்வு என எப்போதுமே பிசியாக இருக்கும் ஒரு நடிகர் தான் கமல்ஹாசன் தற்போது அவரின் நடிப்பில் வெளியான விக்ரம் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து இவர் எச் வினோத் மணிரத்தினம் உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்களிடம் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் சீசன் ஆறு நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருகிறார்.

எந்த கட்டத்தில் திடீரென்று ஹைதராபாத்துக்கு சென்று பழம்பெரும் நடிகர் கே. விஸ்வநாத்தை சந்தித்து விட்டு சென்னைக்கு திரும்பிய கமலஹாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் உடல் நிலையை பரிசோதிக்க மருத்துவர்கள் அறிக்கையை வெளியிட்டனர். அதாவது அவருக்கு லேசான காய்ச்சல் தான் உள்ளது எனவும் வெறும் சளி இருமல் தான் இருக்கிறது. கூடிய சீக்கிரம் குணமடையும் தற்போது கொஞ்சம் ஓய்வு தேவை என கூறியிருக்கிறார்கள்.
இதனால் சனிக்கிழமை நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமலஹாசன் கலந்து கொள்வாரா என்பது ரசிகர்கள் மத்தயில் கேள்விக்குறியாகவே உள்ளது.
