“பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று நான் சொன்னதில் என்ன தவறு” ? | மனு போட்ட கனல் கண்ணன் |தீர்ப்பு என்ன ?

இந்து முன்னணி சார்பில் கடந்த ஒரு மாதமாக இந்துக்களின் உரிமை மீட்ப பிரச்சாரம் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்த நிறைவு விழா சென்னையில் நேற்று நடந்தது. அதில் பிரபல திரைப்பட பைட் மாஸ்டர் கனல் கண்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் இந்துவாக இருப்பது பெருமை தான். ஆனால் ஒரு காலத்தில் வாழ் எடுத்து சண்டை போட்டு நாடு பிடித்தனர். ஆனால் இப்போது மதத்தை மாற்றி நாட்டை பிடிக்கின்றனர் என்று கூறியிருந்தார். மேலும் பேசிய அவர் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்தவுடன் அங்கு ஒரு சிலை இருக்கிறது, அதில் கடவுள் இல்லை என எழுதப்பட்டிருக்கிறது. நான் சொல்கிறேன் அந்த சிலை எப்போது உடைக்கப்படுகிறதோ அது தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என அவர் உணர்ச்சிபோங்க பேசியிருக்கிறார்.

அவர் இந்த பேச்சுக்கு பெரியார் ஆதரவாளர்களும் தி.கா கழகங்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது, சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த மாதிரி பேசி இருக்கிறார். கனல் கண்ணன் அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுக்கின்றது. அதனால் அவர் மீதும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

அண்ணன் உதயநிதியுடன் களத்தில் இறங்கும் தம்பி நடிகர் அருள்நிதி | பக்கவா பிளான் போட்டு அநோவுன்ஸ்மென்ட் வெளிவிட்டுட்டாங்க

இதனை அடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கனல் கண்ணன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய அவருடைய வீட்டிற்கு சென்றபோது வீட்டில் இல்லாத காரணத்தால் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் அவர்கள் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த மனுவில் :- “தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் வந்து செல்லும் ஒரு இடத்தில் கடவுளை கொச்சைப்படுத்துவது போல வாசகங்களை எழுதி ஒரு சிலையை அங்கே வைத்திருக்கிறார்கள். அதை எடுக்க வேண்டும் என சொன்னதற்கு என்னை கொச்சையாக பேசுகின்றனர். நான் சொன்னதில் என்ன தவறு ? அந்த வாசகங்கள் பக்தர்களின் மனதை புண்படுத்தும் அல்லவா ?

இது இந்துக்களின் நம்பிக்கையை கெடுக்கும் ஒரு விஷயமாகும். மேலும் யூட்யூப் புரூட்டஸ் என்ற youtube சேனலில் ஹிந்துக்களை பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆனால் துரதிஷ்டவசமாக என் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த ஜாமின் மனு மீதான விசாரணை நாளை அல்லது நாளை மறுதினம் வரும் என தெரிகிறது.

Spread the love

Related Posts

அகமதாபாத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருக்கா ? | இன்றாவது பைனல் போட்டி நடக்குமா ?

அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்ததை அடுத்து, இன்று ஒரு சில இடங்களில் வானம் மேக

வாரிசு துணிவு திரைப்படங்கள் திரையிடப்பட்ட திரையரங்கை மூட உத்தரவிட்ட ஆட்சியர்

சேலம் ஆத்தூரில் பொங்கல் பண்டிகை தினத்தில் துணிவு வாரிசு படங்களின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட திரையரங்குகளை

வெற்றிகரமாக 3-ஆவது மனைவியுடன் சேர்ந்து தனது 9-ஆவது குழந்தையை பெற்றெடுத்த டெஸ்லா உரிமையாளர் எலன் மஸ்க்

டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலன் மஸ்க்க்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. எலன் மஸ்க் அவர்கள்

Latest News

Big Stories