இந்து முன்னணி சார்பில் ஆக. 1-ல் மதுரவயலில் நடந்த நிகழ்ச்சியில் பெரியார் சிலை உடைக்கப்பட வேண்டும், என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்த கனல் கண்ணன் பாண்டிச்சேரியில் வைத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளார்
உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான கனல் கண்ணன் பேசி இருப்பது பெரும் பரபரப்பையும் சமூக வலைதளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்தியது இதனை அடுத்து பல வழக்குகள் அவர் மீது குவிந்தன கனல் கண்ணனை தேடி காவல் துறை அதிரடி காட்டியது எங்கு தேடியும் கிடைக்கவில்லை இதனை அடுத்து 14 நாட்கள் பிறகு பாண்டிச்சேரியில் வைத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் கனல் கண்ணனை கைது செய்துள்ளார்கள்
