கார்நாடக மாநிலம் தாவணிக்கரை மாவட்டம் தாவாங்கேரியில் உள்ள ஆசாத் நகரை சேர்ந்தவர் சல்மான்கான் சாதிக். இவர் கணவரை இழந்த விதவை பெண்கள் மற்றும் விவாகரத்து ஆன பெண்கள் கணவரை பிரிந்து வாழும் பெண்களை குறி வைத்து திருமண வலையை வீசியதாக தெரிகிறது. “இனிமே நாம புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்” என ஒற்றை டயலாக்கை வைத்து ஹரிஹரா பகுதியைச் சேர்ந்த ஆசாத் நகர் பாஷா நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த நான்கு பெண்களை அடுத்தடுத்து திருமணம் செய்துள்ளார்
அவரது குடும்பத்தினர் சப்போர்ட்டோடு திருமண வேலைகளை அரங்கேற்றிய சல்மான் கான் சாதிக் திருமணம் செய்து கொண்ட பெண்களிடமிருந்து பணம் நகைகளை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. அதிலும் முதல் மனைவியை அடித்து துன்புறுத்தி அவரது வீட்டையே விற்ற சல்மான்கான் சாதிக் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியை நீர்க்கதியாக விட்டதாகவும் தெரிகிறது.


அதுமட்டுமல்லாது இந்தியா ஹியூமன் ரைட்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் சுமார் 70-க்கும் மேற்பட்டோரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். கணவனின் கணக்கற்ற மோசடி திருட்டு திருமணம் ஆகியவற்றை கண்டறிந்த மனைவிகள் சல்மான்கான் சாதிக்கை தேடித்தேடி கண்டுபிடிக்க முடியாமல் ஓய்ந்தனர்.
இந்த நிலையில் நான்காவது மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்த சல்மான்கான் சாதிக் கூடல் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சல்மான்கான் சாதிக்கை எதேச்சியாக கண்ட அவரது முதல் மனைவியும் மூன்றாவது மனைவியும் சுற்றி வளைத்து பிடித்து செருப்பால் அடித்துள்ளார்.
முடிந்தவரை அடித்து ஆத்திரத்தை தீர்த்துக் கொண்ட மனைவிகள் அப்படியே ஆசாத் நகர் காவல் நிலையத்தில் சல்மான் கான் சாதிக்கை ஒப்படைத்தனர். இந்த வீடியோவை பார்க்கும் பலரும் இந்த தர்ம அடி எல்லாம் இந்த திருமண மன்னனுக்கு போதாது அடுத்து திருமணம் என்றாலே திரும்பி பார்க்காமல் ஓட வேண்டும். அப்படி ஒரு தண்டனை கொடுத்தால் மட்டுமே இனி எந்த ஆண்களும் இப்படி செய்ய மாட்டார்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

