கடந்த ஒரு வார காலமாக கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை பெரும் பிரச்சனையாக தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது. கர்நாடகாவில் புதிய ஆடை கட்டுப்பாடு தற்போது அமலில் உள்ள நிலையில் முஸ்லீம் மாணவர்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என கல்லூரி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் முஸ்லீம் மாணவர்களோ ஹிஜாப் எங்கள் உரிமை நாங்கள் அதை அணிந்து கொண்டு தன வருவோம் என தடாலடியாக கல்லூரியை எதிர்த்து போராட்டம் செய்தனர்.

இதற்க்கு பதில் அளிக்கும் விதமாக ஹிந்து மாணவர்கள் நீங்கள் ஹிஜாப் அணிந்து வாந்தால் நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம் என கோதாவில் குதித்து காவி உடை அணிந்து வந்தனர். இதனால் கர்நாடகாவில் பல பள்ளி கல்லூரிகளிலும் கலவர கோலமாக காணப்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் நலம் காக்கவும், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் நலன் காக்கவும் மற்றும் பொதுமக்கள் நலன் காக்கவும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் கர்நாடக முதல்வர்.