சென்னை மெரினா கடற்கரையில் அமைய உள்ள கருணாநிதியின் நினைவுச் சின்னமான பேனாவை வைக்க மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கி உள்ளது.
மறைந்த முன்னாள் திமுக தலைவர் மற்றும் கருணாநிதி அவர்களின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவர்கள் நினைவிடத்திற்கு பக்கத்திலேயே கடலில் தமிழக அரசு சார்பில் தமிழக அரசின் சார்பில் பேனா வடிவம் கொண்ட நினைவுச் சின்னத்தை இந்த திட்டத்திற்காக மாநில கடலோர மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதிக்காக தமிழக அரசு காத்திருந்தது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் எழுதி உள்ளது. இந்த நிலையில் சென்னை மெரினாவில் கருணாநிதியின் நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு தற்போது மத்திய அரசு முதல் கட்ட அனுமதி கொடுத்துள்ளது. மேலும் பொதுமக்களிடம் இந்த திட்டம் தொடர்பாக கேட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியை பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிட தக்கது.
