முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார்.
இன்றைக்கு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார் அப்போது பேசிய அவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு கருணாநிதி குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்தார். கருணாநிதியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என கருத்தினை முன்வைத்தார்.

இன்றைய பேரவையில் 110 விதியின் கீழ் அதில் அவர் பேசியதை என்னவென்றால் :-
“தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாக தான் மிதப்பேன் அதில் ஏறி பயணம் செய்யலாம் கவிழ்ந்து விட மாட்டேன் எனக் கூறியவர் கருணாநிதி நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பதிமூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து 60 ஆண்டுகள் சட்டமன்றத்தில் பணியாற்றியவர். ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த 19 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தவர். இந்தியா குடியரசு தலைவர்களாலும், பிரமுகர்களாலும் பாராட்டப்பட்டவர். கருணாநிதி அவருடைய பிறந்தநாளான ஜூன் மூன்றாம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் அண்ணாசாலையில் பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு நடுவே முதல்வர் கருணாநிதியின் சிலை நிறுவப்படும்” என குறிப்பிட்டார்
