நடிகை கீர்த்தி சுரேஷிற்கு மாப்பிள்ளை பார்ப்பதாகவும் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ஒரு தகவல் வெளியாகி வருகின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தென் இந்திய சினிமாவில் ஒரு பிரபலமான நடிகை ஆவார். ரஜினி, விஜய் சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இவருடைய வசீகர முகம் தான் அதற்கு காரணம். முடிந்த அளவிற்கு கவர்ச்சி காட்டாமல் இருக்கும் திரைப்படத்தில் மட்டுமே நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

அதற்க்கு காரணம் என்ன எந்த இடத்திலும் கவர்ச்சி காட்டாமல் இருக்க வேண்டும் என்று ஒரு பாலிசியை வைத்திருக்கிறார். அதனால் என்னவோ குடும்ப பெண்ணாக இவரை பார்த்து பல ரசிகர்களுக்கு பழகி விட்டது. இவருக்கு ரசிகர்கள் பெருக காரணம் நடிகைகள் மத்தியில் கவர்ச்சியை காட்டாமல் தன்னுடைய வசீகரா முகத்தால் மட்டும் ரசிகர்களை ஈர்த்தார்.
இப்போது இவருக்கு ஒரு பெரிய அரசியல்வாதி தொழிலதிபர்யுடன் திருமணம் நடைபெற உள்ளதாகவும் இதுகுறித்து அவரின் வீட்டார் கீர்த்தி சுரேஷ் உடன் பேசியதாகவும் அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாக செய்தி பரவுகிறது. அது யார் என்று இன்றும் தெரியவில்லை. எனினும் இன்னும் ஒரு சில மாதங்களில் கீர்த்தி சுரேஷ் திருமண விவகாரத்தை பற்றி செய்திகள் சமூக வலைத்தளத்தில் வரும் என நம்பப்படுகிறது.
