பெண்களின் ஆடைகளை தொடர்பு படுத்தி தான் பாலியல் சம்பவங்கள் நடக்கின்றது என சர்ச்சையான தீர்ப்புகள் வருவதால் கேரளா பெண்கள் ஒரு புது முன்னெடுப்பை தங்களது ஆடையின் மூலம் நடத்தி வருகின்றனர்.


பெரும்பாலும் பாலியல் தொடர்பான வழக்குகளில் பெண் அணிந்திருக்கும் உடை தான் காரணம் என்று தீர்ப்பு வழங்குகின்றனர். ஆண்களின் தவறை அவர்கள் கணக்கில் கூட எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பெண்களின் ஆடை பற்றிய கேள்விகள் முற்றிலும் தேவையில்லாத ஒன்று.


தற்போது அதை உணர்த்தும் வகையில் மருத்துவ கல்லூரி மாணவிகள் ஒரு புதிய முன்னெடுப்பை தொடங்கியுள்ளனர். கேரளாவில் உள்ள கோழிக்கோடு மருத்துவ கல்லூரி சார்பில் மாணவிகள் மாடர்ன் உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.


உடையால் தான் பாலியல் சம்பவங்கள் நிகழ்கிறது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பது அந்தக் குழுவின் நோக்கம். இந்த போட்டோ சூட் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு பூங்காவில் எடுக்கப்பட்டது. அந்த போட்டோ சூட்டில் பல்வேறு பெண்கள் ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்து போட்டோ எடுத்துக் கொண்டனர். ஆடைகள் சம்பந்தமாக இருக்கும் பாலியல் சம்பவ கருத்துக்கள் உடைக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கேரளா பெண்கள் இதை முன்னெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

