கன்னட சினிமா ஹீரோ நடிகரும் மற்றும் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகருமான சுதீப் புலி படத்தில் நடித்ததை குறித்து பேசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கிச்சாசுதீப் 1997 ஆம் ஆண்டு தயவ்வா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவுக்கு அறிமுகமானார். மேலும் இவர் கதாநாயகன் வில்லன் என பன்முக தோற்றத்தில் நடித்த வெற்றி படங்களை கன்னடா சினிமாவுக்கு கொடுத்தவர். தயாரிப்பாளராகவும் உருவாகி பல படங்களை தயாரித்தார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் முதன் முதலில் அறிமுகமான படம் தான் நான் ஈ. இந்த படம் இரண்டு மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. பாகுபலி புகழ் ராஜமவுலி எடுக்கப்பட்ட இந்த படத்தின் மூலம் நடிகர் கிச்சா சுதீப்பிற்கு தமிழிலும் பட வாய்ப்புகள் கிட்டியது. ஆனால் அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் தவித்தார். இதனால் கனடாவில் நிறைய படங்களில் நடித்தார்.

தற்போது இவரின் விக்ராந்த் ரோனா படம் இந்திய அளவில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கிச்சா அவர்கள் அங்கு பத்திரிக்கையாளர்கள் கேட்ட அனைத்து விதமான கேள்விக்கும் பதில் அளித்தார். அப்போது பேசிய கிச்சா சுதீப் :- “என்னை பல தயாரிப்பாளர்கள் வணங்கினர். பின்னர் அவர்கள் நான் ஈ படம் பார்த்துவிட்டு நான் வில்லனா அல்லது ஹீரோவா உங்களுக்கு எந்த மாதிரியான படம் செட் ஆகும் என தெரியாமல் முழித்தனர். எனக்கு வில்லனாக நடிக்கவும் பிரச்சனை இல்லை அதனால் நான் வில்லனாக நடிக்கவும் ஒப்புக்கொண்டேன்.
அப்போதுதான் எனக்கு புலி படம் கிடைத்தது. அந்தப் படத்திற்கு பிறகு என்னை நீங்கள் வீட்டிற்கு அனுப்பி விட்டீர்கள்” என நகைச்சுவையாக புலி படத்தின் அனுபவத்தை பற்றி பேசியுள்ளார். அதனால் இனிமேல் நான் வில்லனாக நடிப்பதில்லை எப்போ தேவையோ அப்போது மட்டும் வில்லனாக நடிப்பேன் என தெரிவித்தார்.
