Viral Video | கடலுக்கே மேல் பறக்கும் விமானத்தை விழுங்கும் திமிங்கலம் | வீடியோ பதிவிட்டு வாங்கி கட்டி கொண்ட கிரண் பேடி

கிரண்பேடி தனது சமூக வலைதளத்தில் திரைப்பட காட்சி ஒன்றை உண்மையாக நடந்தது போல் நேஷனல் ஜியோகிராபி ஒரு மில்லியன் டாலர் கொடுத்து இந்த வீடியோவை படமாக்கியது என்று உதார் விட்டு மிகவும் சோக எமோஜி போட்டு பதிவிட்ட ஒரு வீடியோவை பார்த்த ட்விட்டர்வாசிகள் அவரை கலாய்த்து வருகின்றனர.

கிரண்பேடி இந்தியாவில் முதல் பெண் ஐபிஎஸ் ஆவார். இவரைப் பற்றி நாம் சிறு வயதிலும் பல பாடப்புத்தகங்ககளில் கண்டிருப்போம், படித்திருப்போம் அத்தகைய பெருமைக்குரியவர் எப்போது பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தாரோ அப்போதிலிருந்து சமூக வலைதள வாசிகள் இடையே மிகவும் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறார். இவர் புதுச்சேரியில் கவர்னராக இருந்த போதிலிருந்தே இவருக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது.

தற்போது நேஷனல் ஜியோகிராபிக் சேனல் ஒரு மில்லியன் டாலர் கொடுத்து ஒரு பெரிய திமிங்கலம் ஒன்று மேலே பறக்கும் விமானத்தை எகிரி பிடித்து விளங்குவதாக வீடியோவை எடுதித்திருக்கின்றனர் என பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோ உண்மையிலேயே “5 headed shark attack” என்கிற ஒரு ஆங்கில படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதை உண்மையாக நடந்தது போல் சோக எமோஜி போட்டு பதிவிட்டிருக்கிறார் கிரண்பேடி.

அந்த வீடியோவை பார்க்கும் போதே தெரிகிறது இது அப்பட்டமான ஒரு பொய் என்று. ஆனால் அது கூட தெரியாமல் அதை டுவிட்டரில் ஷேர் செய்து இருக்கிறார் கிரண்பேடி இவர் உண்மையிலேயே ஐபிஎஸ் முடித்தவர் தானா என்று சந்தேகம் உள்ளது என பலர் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு முன்பு நாசா வெளியிட்ட ஒரு ஆடியோ என ஒன்றை பதிவிட்டார். அதில் “ஓம்” என்ற சத்தத்தை சூரியன் எழுப்புகிறது என தவறான ஒரு பதிவை பதிவிட்டார். அப்போதும் அவரை இதேபோல்தான் டுவிட்டரில் கலாய்த்து வந்தனர். ஆனால் தற்போது ஒரு படி மேலே போய் இந்த நம்ப முடியாத வீடியோவை அவர் பதிவிட்டு இருப்பது அனைவரையும் வேடிக்கைக்குள்ளாக்கியுள்ளது.

Spread the love

Related Posts

IPL Auction 2022 | ப்ராவோவை மீண்டும் தட்டி தூக்கிய சென்னை அணி

ஐபிஎல் ஏலம் கோலாகலமாக பெங்களூரில் தற்போது தொடங்கியுள்ளது இதில் வீரர்களை எடுக்க அனைத்து அணியும் மும்முரம்

2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது | நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் | புது குண்டை தூக்கி போட்ட OPS & EPS

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்கள் திருச்சியில் பேசும்போது ஒரு புகையை மூட்டியுள்ளார், அது என்னவென்றால் 2024

கோவை அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் வெட்டுப்பட்டு துண்டான கையை மீண்டும் பொருத்தி சாதனை படைத்துள்ளனர்

குடும்பத்தகராறு காரணமாக அரிவாளால் வெட்டப்பட்டு பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து